லண்டன்: 25 ஆண்டுகளுக்கு பின் மெட்ரோ ரயிலில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மனைவியுடன் பயணித்தார். உலகில் முதன்முறையாக பிரிட்டனில் மெட்ரோ ரயில் போக்குவரத்து (1869) துவக்கப்பட்டது. இதன் 150-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் தினந்தோறும் 35 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா ஆகியோர் நேற்று லண்டன் மெட்ரோ ரயில்நிலையம் வந்தனர். அங்கிருந்து ஃபாரிங்டன் சுரங்க ரயில்நிலையம் வரை சென்றனர். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பின்னர் இளவரசர் மெட்ரோ ரயிலில் பயணித்தார். கடைசியாக கடந்த 1986-ம் ஆண்டு , இளவரசி டயானாவுடன் , சார்லஸ் பயணித்தார் என்பது குறிப்பிடதக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.