Advertisement
நினைவூட்டும் பயிற்சியில் பங்கேற்காமல் ஆயுதப்படை போலீஸார் "டிமிக்கி'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,02:18 IST

நாமக்கல்: போலீஸ் எஸ்.பி., அலுவலக டிரைவர் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸார், பணியை காரணம்காட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் நினைவூட்டும் பயிற்சியில் பங்கேற்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவில், 240 போலீஸார் வீதம் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் போலீஸார், மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலக பாதுகாப்பு, அதிகாரிகளின் ஜீப் டிரைவர், குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து செல்லும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அனைத்து போலீஸாருக்கும், தற்போது ஆயுதப்படை பிரிவு மைதானத்தில், நினைவூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காலை, மாலை வேளைகளில் போலீஸாருக்கு, அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பிப்ரவரி, 13ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நினைவூட்டும் பயிற்சியில் ஆயுதப்படை போலீஸார் முழுமையாக பங்கேற்பதில்லை. எஸ்.பி., டி.எஸ்.பி., அலுவலக பணிக்கு செல்லும் போலீஸார், பணியை காரணம் காட்டி, காலை நேரத்தில் மட்டும் நினைவூட்டும் பயிற்சியை மேற்கொள்கின்றனர். மாலையில், பயிற்சியில் பங்கேற்கப்பதில்லை.
இது குறித்து ஆயுதப்படை போலீஸார் சிலர் கூறியதாவது:
ஆயுதப்படை போலீஸார் அனைவரும் நினைவூட்டும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என, விதிமுறை உள்ளது. ஆனால், அதிகாரிகளின் ஜீப் டிரைவர் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள், நினைவூட்டும் பயிற்சியில் பங்கேற்கபதில்லை. அதிகாரிகளும் அவர்களை கண்டு கொள்வதில்லை. பயிற்சி காலத்தில், லோக்கல் ஸ்டேசன் போலீஸாரை ஆயுதப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகின்றனர்.
அதுபோல் பயிற்சி நடக்கும், 15 தினங்களும் ஆயுதப்படை போலீஸார் மேற்கொண்ட பணியை, ஸ்டேசன் போலீஸாரை வைத்து மேற்கொள்ள வேண்டும். அப்போது, ஆயுதப்படை போலீஸார் அனைவரும் முறையாக நினைவூட்டும் பயிற்சியில் பங்கேற்பர், என்றனர்.
இதுகுறித்து ஆயுதப்படை போலீஸ் பிரிவு டி.எஸ்.பி., சிவகுரு கூறுகையில், ""ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணிபுரியும் போலீஸார் சிலர் அதிகாரிகளின் டிரைவர், நிலைய எழுத்தர் போன்ற பணிகளில் ஈடுபடுவர். அதனால், அவர்கள் காலையில் நடக்கும் பயிற்சியில் மட்டும் பங்கேற்றால் போதும். மாலையில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை. தவிர, எஸ்.பி., அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் அனைவரும், மாலையில் நடக்கும் நினைவூட்டும் பயிற்சியில் பங்கேற்கின்றனர்,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.