சேலம்: பராமரிப்பு பணிகளுக்காக, ஃபிப்ரவரி, 2ம் தேதி ஒரு நாள் மட்டும் பாலக்காடு-திருச்சி பாஸஞ்சர் ரயில், ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.
சேலம் ரயில்வே கோட்ட தலைமை அலுவலக பத்திரிகை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரோட்டில் இருந்து சாவடிபாளையம் வரை, ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி, ஃபிப்ரவரி, 2ம் தேதி நடக்கிறது. இதற்காக சில ரயில்கள் இயக்கப்படுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பாஸஞ்சர் ரயில் வழக்கமாக கோவையில் இருந்து காலை, 7.10 மணிக்கு புறப்படும். ஃபிப்ரவரி, 2ம் தேதி மட்டும், காலை, 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. வஞ்சிப்பாளையம், விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்காமல் காலை, 9 மணிக்கு சாவடிபாளையம் சென்றடையும். பின்னர், அங்கிருந்து கொடுமுடி, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் சென்றடையும்.
பாலக்காட்டில் இருந்து திருச்சி வரை, செல்லும் பாஸ்ட் பாஸஞ்சர் ரயில், ஈரோடு வரை, மட்டுமே இயக்கப்படும். திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பாஸஞ்சர் ரயில், சாவடிபாளையம் வரை, மட்டுமே இயக்கப்படும். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து ஈரோடு வரை, செல்லும் பாஸஞ்சர் ரயிலும் சாவடிபாளையம் வரை, மட்டுமே இயக்கப்படும். ஃபிப்ரவரி 3ம் தேதி முதல் வழக்கமான ரயில்வே நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.