அவலூர்பேட்டை : ஊட்டச்சத்து கரைசல் தெளித்தால் வேர்கடலையில் 20 சதவீதம் கூடுதல் விளைச்சலை பெறலாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேலு செய்திக்குறிப்பு:
மேல்மலையனூர் வட்டாரம் அவலூர்பேட்டை, சாத்தாம்பாடி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் அளவில் வேர்கடலை சாகு படி செய்யப்பட்டுள்ளது.
வேர்கடலை விதைத்த 25 முதல் 35 நாட்களில், ஊட்டச்சத்து கரைசல் தெளிக்க வேண்டும். இதனால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு ஒரு கிலோ டி.ஏ.பி.,யுடன், 200 கிராம் போரக்சை 10 லிட்டர் நீரில் ஊற வைத்து மறு நாள் மாலையில் கரைசலை வடிகட்ட வேண்டும்.
பின்னர் 190 லிட்டர் நீர் கரைசலில், 400 கிராம் அமோனியம் சல்பேட் உரத்தையும், 180 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தை கலந்தும் கரைசலை தயாரிக்க வேண்டும்.
மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது, மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால், விழுதுகள் பூமிக்குள் எளிதாக இறங்கி, திரட்சியான வேர்கடலைகள் உருவாகும். இதனை 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்து கரைசலை தெளிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு, விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.