தர்மபுரி: தர்மபுரி, நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், அரசு பஸ்கள் டீஸல் போட நிறுத்தப்படுவதால், இந்த சாலை கடந்த சில நாட்களாக நெரிசலில் தவித்து வருகிறது.
மத்திய அரசு டீஸல் விலையில் கடைபிடித்து வரும், இரட்டை நிலையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு கூடுதலாக, 11 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு வருவாதவும், அதை போக்கும் விதமாக தனியார் பெட்ரோல் பங்குகளில் அரசு பஸ்களுக்கு டீஸல் நிரப்பு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 27ம் தேதி முதல் அரசு பஸ்களுக்கு தனியார் பங்குகளில் டீஸல் நிரப்பப்பட்டு வருகிறது. தர்மபுரி நகரில் உள்ள, இரு டிப்போக்கள் மூலம் இயக்கப்பட்டு வரும், 92 நகர் மற்றும், 88 புறநகர் பஸ்கள், நேதாஜி பைபாஸ் சாலை நெசவாளர் காலனி அருகே உள்ள தனியார் பங்கில் டீஸல் நிரப்பட்டு வருகிறது.
டீஸல் நிரப்புவதற்காக நேதாஜி பைபாஸ் சாலையில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படும் அரசு பஸ்களால் இப்பகுதியில் கடந்த சில தினங்களா தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள வங்கிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீஸார் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை அகற்றவும், போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடவும், பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.