ஓசூர்: ஓசூர் நகராட்சியில், 48 லட்சத்து, 7 ஆயிரத்து 698 ரூபாய் குத்தகை தொகை பாக்கி நிலுவையில் உள்ளது. பாக்கியை வசூலிக்க நகராட்சி நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஓசூர் நகராட்சியில், எம்.ஜி.ஆர்., தினசரி மார்க்கெட் சுங்கம் வசூலித்தல், ஆடு வதை செய்யும் வளாகம் பராமரிப்பு, வாரசந்தையில் சுங்கம் வசூலித்தல், புதிய பஸ் ஸ்டாண்ட் பஸ்களுக்கு சுங்கம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் உள்ளன.
இந்த வருவாய் இனங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள், நகராட்சிக்கு கடந்த, 2008ம் ஆண்டு முதல் முறையாக குத்தகை பணத்தை செலுத்தவில்லை. இதுகுறித்து நகராட்சி பலமுறை கடிதம் மூலமோ, நேரடியாக அறிவுரை வழங்கியும், குத்தகை பணம் செலுத்தவில்லை.
இதனால், வாரச்சந்தையை சுங்கம் வசூலித்தல் உரிமையை ஏலம் எடுத்தவகையில், 9 லட்சத்து, 92 ஆயிரத்து, 193 ரூபாயும், எம்.ஜி.ஆர்., தினசரி மார்க்கெட்டில் சுங்கம் வசூலித்தலை எடுத்த வகையில், 21 லட்சத்து, 99 ஆயிரத்து, 382 ரூபாயும், புதிய பஸ்ஸ்டாண்ட்டில் பஸ்களுக்கு சுங்கம் வசூலிக்க ஏலம் எடுத்தவகையில், 13 லடசத்து, 77 ஆயிரத்து, 710 ரூபாயும், ஆடு வதை செய்யும் வளாகத்தை பராமரிக்கும் பொறுப்பை குத்தகை எடுத்த வகையில், 2 லட்சத்து, 38 ஆயிரத்து, 413 ரூபாயும் பாக்கி உள்ளது.
மொத்தம், 48 லட்சத்து, 7 ஆயிரத்து, 698 ரூபாய் பாக்கி நிலுவையில் உள்ளது. குத்தகை தொகையை செலுத்தாத குத்தகைதாரர்கள் மீது நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து நிலுவை பணத்தை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்க கோரி, இன்று (ஜன.,31) நடக்கும் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.