சிவகங்கை: ""மாநில சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்று வந்தால், மாவட்டத்தில் கனிமங்கள் எடுக்க அனுமதிக்கப்படும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். அவரது அறிக்கை: தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதி 1959ன் கீழ், தனி நபர்களுக்கு சாதாரண சிறு கனிமங்களான கற்கள், செம்மண், சவடுமண், செங்கல், களிமண் ஆகியவற்றை வெட்டியெடுத்து செல்ல, 5 எக்டேருக்கு குறைவாக அனுமதிகோரி மனு செய்து கொள்ள, நில உடமை மற்றும் இதர இனங்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலரின் அறிக்கைபெற்று பரிசீலித்து, ஆட்சேபணை இல்லாத போது அனுமதி வழங்கப்படும். அப்போது, சுப்ரீம் கோர்ட் மற்றும் அரசின் உத்தரவுக்கு இணங்க, சுரங்கத்திட்டம் அங்கீகாரத்திற்கு சமர்பிக்கவும். அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உத்தரவு பெற்று சமர்பிக்கவேண்டும். அவ்வாறு சமர்பிப்பவர்களுக்கு கனிமங்கள் எடுக்க அனுமதி தரப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.