திருவனந்தபுரம்: மின்சாதன பொருட்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் நடந்த ஊழலில் முக்கிய குற்றவாளி பினராய் விஜயன் தான் என கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறினார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பினராய்விஜயன் மீது முன்னாள் முதல்வரும், பொலிட் பீரோ உறுப்பினருமான அச்சுதானந்தனுக்கு சில ஆண்டுகளாக தீராத பகை. இருவரும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகின்றனர்.பினராய்விஜயன் முன்னர் இடது சாரிகள் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது ,கனடாவைச்சேர்ந்த எஸ்.என்.எஸ். லவாலியன் நிறுவனத்திடம் மின்சாதன பொருட்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக சி.பி.ஐ.வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் அச்சுதானந்தன் நேற்று டி.வி.சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், லவாலியன் மின்திட்ட ஊழலில் பினராய் விஜயன் குற்றவாளி தான், அவர் ஊழல் செய்திருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதனை நான் கூறியதற்காக என்னை பொலிட்பீரோ உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது கட்சி மேலிடம். அதனை பற்றி நான் கவலைப்படவில்லை. எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளானவர் தான் என அப்போது சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்வேன். இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.