விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், காலி
சாக்குகள் எடுக்காததால், ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்க முடியவில்லை. ரேஷன்
பணியாளர்கள் சம்பளம்
இல்லாமல் தவித்து வருகின்றனர். கூட்டுறவுத்துறை,
நுகர்பொருள் வாணிப கிடங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்கள்
சார்பில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மாதம்
தோறும் சேகரிக்கப்படும் காலி சாக்குகளுக்கு,மாவட்ட அளவில் காலி சாக்கு
விலை நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, விற்பனை
செய்யப்படும். இந்த பணம் ரேஷன் கடை நிர்வாகம் செய்யவும், பணியாளர்கள்
சம்பளத்திற்கும் பயன்படும். இந் நிலையை மாற்றிய அரசு ,மாநில அளவில் கமிட்டி
அமைக்கப்பட்டு, காலி சாக்குகள் டெண்டர் விடப்பட்டது. மதுரை, திண்டுக்கல்,
சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் டெண்டர் விடப்படாமல் உள்ளது. ஏழு
மாதங்களில் ரேஷன் கடைகளில் ஆயிரக்கணக்கில் சாக்குகள் தேக்கமடைந்துள்ளன.
ரேஷன் கடைகளில் சாக்குகள் நிறைந்துள்ளதால், பொது வினியோகப்பொருட்கள்
இருப்பு வைக்க முடியாத நிலை உள்ளது. பொது வினியோகப்பணி பாதிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. காலி சாக்குகள் தற்காலிகமாக எடுத்துக்கொண்டிருந்த,
நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகளும் எடுப்பதில்லை. ரேஷன் கடை
விற்பனையாளர் ஒருவர் கூறுகையில்,""காலி சாக்குகள் ஏழு மாதமாக
எடுக்கப்படவில்லை. தேக்கமடைந்துள்ளதால், பொருட்களை இருப்பு வைக்க முடியாத
நிலை உள்ளது. காலி சாக்கு விற்பனை செய்தால் தான் சம்பளம் வழங்கும் நிலை
இருப்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா கிடங்குகளில்
கொண்டு சேர்க்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஆனால் தாலுகா கிடங்கில்
சாக்குகளை வாங்க மறுக்கின்றனர்,'' என்றார். நுகர்பொருள் வாணிப கிடங்கு
அதிகாரி சிவராமன் கூறுகையில், ""ரேஷன் கடைகளில் தேக்கமடைந்துள்ள காலி
சாக்குகளை, அந்தந்த தாலுகாவில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் கொண்டு
சேர்க்கலாம்,'' என்றார். இதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து,
காலிசாக்குகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.