உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் கல்கத்தா "டோக்கன்' லாட்டரி விற்பனை பகிரங்கமாக "களை' கட்டியுள்ளது. தமிழகத்தில் லாட்டரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், லாட்டரி "முதலைகள்', அண்டை மாநிலங்களிலில் தங்கள் ஜாகையை மாற்றி தொழிலை தொடர்கின்றனர். தேனி மாவட்டம், கேரள எல்லையில் இருப்பதால்,இந்த லாட்டரி முதலைகள், அங்கிருந்து பல மாநிலங்களின் லாட்டரிகளை, தேனி மாவட்டத்தில் ரகசியமாக விற்பனைக்கு விட்டுள்ளனர். அவ்வப்போது, போலீசார் விழித்துக் கொள்ளும்போது மட்டும் விற்பனை சுணக்கமடையும். பின்னர் வழக்கம்போல் தொடரும். இந்த லாட்டரி விற்பனையில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு, பல "சிக்கல்களும்' தொடர்ந்து வரும். "டோக்கன்' லாட்டரி: இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்கத்தாவின் "டோக்கன்' லாட்டரிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. ரெகுலர் லாட்டரிகளை வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வருவதே பெரும் "ரிஸ்க்கான' வேலை. பிறகு விற்பனை செய்யும் போது, போலீஸ், வழக்கு என பல இடர்கள் விற்பனை செய்பவர்களுக்கு உள்ளது. கல்கத்தா லாட்டரியில் அந்த பிரச்னைகள் எதுவும் இல்லை. கல்கத்தாவில் நடத்தப்படும் லாட்டரி கம்பெனிகளிலிருந்து, இங்குள்ள லாட்டரி முதலைகள், ஒவ்வொரு நாளும் மொத்தமாக ஆயிரக்கணக்கான லாட்டரிகளை வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும் லாட்டரிகள் டிக்கெட்டாக வருவதில்லை. அதற்கு பதில், வாங்கப்பட்ட லாட்டரிகளின் எண்கள் மட்டும் பேக்ஸ் அல்லது இ-மெயிலில் அனுப்பப்படும். அந்த எண்களை மட்டும் பெற்று மொத்த வியாபாரிகளுக்கும் சில்லரை வியாபாரிகளுக்கும் அதனை தேவைப்படும் எண்ணிக்கையில் விற்கின்றனர். இந்த எண்களை விலை கொடுத்து பெறும் சில்லரை வியாபாரிகள், மக்களிடம் அந்த எண்களை மட்டும் டோக்கனில் எழுதி கொடுத்து விற்று விடுகின்றனர். பரிசு விழும் எண்களை கல்கத்தா லாட்டரி கம்பெனிகள், தங்களிடம் வாங்கிய மொத்த வியாபாரிகளுக்கு பேக்ஸ் அல்லது இ-மெயிலில் அனுப்பிவிடுகின்றன. இதனை தெரிந்து கொள்ளும் சில்லரை வியாபாரிகள், ரிசல்ட்டை தங்களிடம் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி பரிசுகளை பெற்றுத் தருகின்றனர். தற்போது இந்த டோக்கன் லாட்டரி வியாபாரம், தேனி மாவட்டத்தில் தங்கு தடையின்றி நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.