புதுடில்லி: குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ. எம்.பி. சித்துவிற்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நன்னடத்தயை மீறி இது போன்று அவர் எதிர்காலத்தில் பேசக்கூடாது எனவும் கண்டிப்பு காட்டியது.கடந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடந்தது. 2012- நவம்பர் 29-ம் தேதி , ஜூனாகத் மாவட்டத்தில் நடந்த பா.ஜ. பிரசாரத்தின் போது, அக்கட்சி எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சி்ங் சித்து (49), பிரதமர் மன்மோகன்சிங், குஜராத் பரிவர்த்தன் கட்சி தலைவர் கேசுபாய்பட்டேல் ஆகியோர் பற்றி அவதூறாக பேசினார். இவர் மீது தேர்தல் கமிஷனிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் இம்மாதம் 5-ம் தேதி சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டது. இதில், நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மீது தனிப்பட்ட முறையில், அவதூறாக பேசியது, தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல், இது வகுப்புவாதத்தினை தூண்டும் வகையில் உள்ளது. இது போன்று எதிர்காலத்தில் இப்படி பேசக்கூடாது.இவ்வாறு தேர்தல் கமிஷன் சித்துவிற்கு கண்டனம் தெரிவித்தது..
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.