திண்டுக்கல்:
"குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர் மட்டும் கவனம் செலுத்தினால்
போதாது, இந்த சமூகமும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்,' என ஐகோர்ட்
கிளை நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்
அருகில் இளஞ்சிறார் நீதிமன்ற குழுமத்திற்கான அலுவலகத்தை திறந்து வைத்து
மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசுகையில்,""குழந்தைகள்
பெற்றோர்களினால் உருவாக்கப்பட்டவை அல்ல. பெற்றோர்களின் மூலம் இந்த உலகிற்கு
அனுப்பி வைக்கப்பட்டவை. மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும்
நல்லவர்கள்தான். அதன் பின் அவர்கள் வளருகின்ற சூழ்நிலைதான் மாற்றங்களை
ஏற்படுத்துகிறது. ஆணும், பெண்ணும் சரிசமமானவர்கள் அல்ல என்று கூறப்பட்டு
வந்த காலக்கட்டத்தில் குழந்தைகளை அன்னைதான் வளர்க்க வேண்டும் என்ற நிலையை
ஏற்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் அந்த நிலை இப்போது மாறிவிட்டது. தாய்,
தந்தை இருவருக்குமே அந்த பொறுப்பு உள்ளது. வீட்டிலிருந்து படிப்பிற்காக
பள்ளி செல்லும் குழந்தை, உடனிருப்பவர்களின் பழக்க வழக்கங்களை கவனித்து
அதேப்போல் நடந்து கொள்ள முயற்சிக்கிறது. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளை
கவனிப்பதில் தாய், தந்தை இருவருக்குமே நேரம் இருப்பதில்லை. தனிமையில்
விடப்படும் குழந்தை, நவீன தொழில் நுட்பங்களின் மூலம் என்னென்ன கற்றுக்கொள்ள
முடியுமோ அனைத்தையும் இளவயதிலேயே தெரிந்து கொண்டு அதன்படி நடக்க
முயற்சிக்கும்போது சிக்கல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க வேண்டுமென்றால்
குழந்தைகள் விஷயத்தில் இந்த சமூகம் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
எனவேதான் அவர்கள் அறியாமல் செய்கிற தவறுகளை மிகைப்படுத்தாமல், குற்றவாளியாக
சித்தரிக்காமல் எந்த அளவிற்கு மென்மையாக கையாளமுடியுமோ அந்த அளவையை
பயன்படுத்தி நல்வழிப்படுத்துவதோடு, தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை
எதிர்கொள்ள வைக்க வேண்டுமென்பதற்காக இளஞ்சிறார் நீதிமன்ற குழுமம்
துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசினார்.மாவட்ட
கலெக்டர் வெங்கடாசலம், மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், எஸ்.பி.,
ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.