மதுரை: "மாமதுரை போற்றுவோம்' விழாவின் ஒரு பகுதியாக, "வைகையை போற்றுவோம்' என்ற நிகழ்ச்சிக்காக, யானைக்கல் வைகையாற்றில் பெரியாறு - வைகையாறு பயன்பாடு குறித்த "3டி' தொழில்நுட்பத்தில் மாதிரி வடிவங்கள் இடம்பெறுகின்றன.இதற்காக, ஒருங்கிணைப்பாளர் தியாகராஜர் பொறியியல் கல்லூரி இணைப்பேராசிரியர் சந்திரன் தலைமையில், மாதிரி வடிவம் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிப்.,8 முதல் 10 வரை நடக்கும் "மாமதுரை போற்றுவோம்' விழாவில், பொதுமக்கள் பார்வையிடலாம்.சந்திரன் கூறியதாவது: பெரியாறு, வைகையாறு எங்கு உற்பத்தியாகிறது; அதன் பயன்பாடு என்ன, துணை ஆறுகள் என்னென்ன, எதையெல்லாம் கடந்து மதுரைக்கு வருகிறது என்பது முதல் ராமநாதபுரம் கண்மாய் வழியாக, கடலில் கலப்பது வரை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் "3டி' தொழில்நுட்பத்தில் மாதிரி காட்சிகளை, 6 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கி வருகிறோம். மேலும், போட்டோ கண்காட்சியும் இடம்பெறுகிறது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.