மதுரை:
மதுரை ஐராவதநல்லூரில், நேற்று அகற்றுவதாக இருந்த ஆக்கிரமிப்பு பணி,
அரசியல் தலையீட்டால் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலை
தொடர்ந்தால், மதுரையில் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க முடியாது.
மாநகராட்சியில், ஆக்கிரமிப்பு இல்லாத இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஆனால், அவற்றின் மீதான நடவடிக்கை சொற்பமே. விரிவாக்கத்தில் இணைந்த
பகுதிகளில், ஆக்கிரமிப்புகள் அதிகம்.குறிப்பாக, ஐராவதநல்லூர் பகுதியில்,
பஸ் போக்குவரத்து இடையூறாக வீடுகள், கட்டடங்கள், மன்றங்கள் அதிகம் உள்ளன.
இது தொடர்பாக, அப்பகுதியான 55 வார்டின் அ.தி.மு.க., கவுன்சிலர் காமாட்சி,
மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்.இதைதொடர்ந்து,
ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். 30க்கும் மேற்பட்ட கட்டடங்கள்
ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது. நேற்று, இடிக்க ஏற்பாடு செய்த
நிலையில், திடீரென நடவடிக்கை ரத்தானது. ஆக்கிரமிப்பில் உள்ள மன்றங்கள்,
கட்சிகளை சேர்ந்தவை என்பதால், அரசியல் குறுக்கீடு நுழைந்து, ஆக்கிரமிப்பு
அகற்றும் நடவடிக்கைக்கு முட்டுக் கட்டையானது. ஆக்கிரமிப்புகளில்
பெரும்பாலானாவை, அரசியல் தொடர்பானவர்களுக்கு சொந்தமானவை என்பதும், மற்றொரு
காரணம். "ஆக்கிரமிப்பை தானாக அகற்றுவதாக அப்பகுதியினர் தெரிவித்ததால்,
நடவடிக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக,' அதிகாரிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர் காமாட்சி கூறியதாவது: 30 ஆண்டுகளாக,
அப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதால், பஸ் போக்குவரத்திற்கு இடையூறாக
உள்ளது. அப்பகுதியினர் முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள் என்ற
நம்பிக்கை எனக்கில்லை. அதே நேரத்தில், மாநகராட்சி அகற்றும் என நம்புகிறேன்,
என்றார்.
ஐராவதநல்லூரில் அவகாசம் கொடுத்த அதிகாரிகள், அய்யர் பங்களா,
நாராயணபுரம் பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை முழுவீச்சில் அகற்றினர். அதன்
மூலம், ஐராவதநல்லூர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அரசியில் தலையீடு
இருப்பது, தெளிவாகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.