"நாடக காதலை' தடுக்க தமிழகம் முழுவதும் குடும்பங்களுக்கு 1 கோடி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருநெல்வேலி: நாடக காதலில் இளம்பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க தமிழகம் முழுவதும் ஒரு கோடி துண்டு அறிக்கைகளை குடும்பங்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.நெல்லையில் அனைத்து சமுதாய பேரியக்க கலந்தாய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:தமிழகத்தில் 17 வது மாவட்டமாக நெல்லையில் அனைத்து சமுதாய கூட்டம் நடக்கிறது. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அரசுக்கு தெரிவிக்க கூட்டம் நடத்துகிறோம். ஜாதி வெறியை தூண்டவோ, ஜாதியை வளர்க்கவோ, ஜாதி சண்டைகளை ஏற்படுத்த
வோ இந்த கூட்டம் நடக்கவில்லை. ஜாதி வெறியை தூண்டக்கூடாது என விழிப்புடன் உள்ளோம். இக்கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் கலப்பு, காதல் திருமணங்களை எதிர்க்கவில்லை.டீன் ஏஜில் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி, வேலைவாய்ப்பை பெற பாடுபட வேண்டும். காதல் என்ற பெயரால் பெண்கள் சீரழியக்கூடாது. பெண்கள் 21 வயதில், ஆண்கள் 23 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் பெற்றோர் சம்மதம் பெற வேண்டும். இதை வலியுறுத்தி பிரேசில், சீனா, ஜப்பான், சிங்கப்பூரில் சட்டம் உள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெற்றோர்கள், அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம். நாடக காதலில் பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க தமிழகம் முழுவதும் ஒரு கோடி துண்டு பிரசுரங்களை குடும்பங்களுக்கு அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்கும்படி கூறவில்லை. அந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க திருத்தம் செய்ய வலியுறுத்துகிறோம். இந்திய அரசியல் சட்டப்பிரிவு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பேசுவதற்கு, கருத்துக்களை தெரிவிப்பதற்கு,
கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது.பட்டியல் பிரிவில் 76 இனங்கள் உள்ளன. ஒரு சிலர், ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமே காதலிக்கும்படி இளைஞர்களை தூண்டுவதாக குற்றம் சாட்டுகிறோம். சென்னையில் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடத்தி நாடக காதல் பாதிப்புகள் குறித்த விபரங்களை ஒரு மாதத்தில் திரட்டுவோம். ஏப்ரலில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும். கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம்.கடந்த கால செயல்பாடுகள் குறித்து வருத்தம், மகிழ்ச்சி எனக்கு கிடையாது. இதன் மூலம் நாங்கள் அரசியல் செய்யவில்லை. அரசியலை தோட்டத்தில் விட்டு விட்டு வந்துள்ளேன். என்னால் எங்கும் வன்முறை நடந்ததில்லை. தமிழகத்தின் 7.24 கோடி மக்களை நான் நேசிக்கிறேன்.இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Madurai,இந்தியா
01-பிப்-201303:46:32 IST Report Abuse
Ram நன்றி அய்யா. இதற்கு முன்னால் உங்களை தவறாக நினைத்து விட்டேன். உண்மையில் இன்று தமிழகத்தில் இது மாதிரி கொடுமைகள் நிறைய நடந்து வருகிறது. அதுவும் ஒரு குறிப்பிட சமூகதினர் இதே பணம் பறிக்கும் நோக்கில் செய்கிறார்கள் மற்றும் இதற்கு பின்னர் பெற்றவர்கள் படும் வேதனை சொல்ல முடியாத சோதனை. மன்னிக்க முடியாத பாவம். நானே இதை நேரில் பார்த்து இருக்கின்றேன். எனது நண்பர் நடை பிணமாக வாழ்கிறார். உங்கள் மீது மரியாதையும் மதிப்பும் கூடுகிறது. உங்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு. மிகவும் நன்றி.
Rate this:
Share this comment
Cancel
SURESH - Chennai  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201319:43:38 IST Report Abuse
SURESH YOU ARE A GREAT LEADER
Rate this:
Share this comment
Cancel
mohamed - chennai  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201319:14:19 IST Report Abuse
mohamed நீங்கள் நல்லா நாடகம் பன்னுறீங்க அய்யா
Rate this:
Share this comment
Cancel
S.K.GOPINATH - mayiladuthurai  ( Posted via: Dinamalar Windows App )
31-ஜன-201313:03:02 IST Report Abuse
S.K.GOPINATH நல்ல திட்டம்
Rate this:
Share this comment
Cancel
S.K.GOPINATH - mayiladuthurai  ( Posted via: Dinamalar Windows App )
31-ஜன-201313:00:50 IST Report Abuse
S.K.GOPINATH அனைத்து சமுதாயத்தினற்கும் சிறந்தவழிகாட்டீ அய்யா
Rate this:
Share this comment
Cancel
sundar - singapore  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201312:47:02 IST Report Abuse
sundar நல்ல செயல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்