திருநெல்வேலி: ராமதாஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் 3 அரசு பஸ்கள் கல் வீசி சேதப்படுத்தப்பட்டது.நெல்லை ஜங்ஷனில் இருந்து கீழ பிள்ளையார்குளம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் மீது நேற்று காலை ராமையன்பட்டி அருகே கல் வீசப்பட்டது. பைக்கில் வந்த 2 பேர் பஸ் மீது கல் வீசி விட்டு தப்பினர். நெல்லையில் இருந்து மேல இலந்தைக்குளம் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் இதே நபர்கள் கல் வீசியுள்ளனர். 2 பஸ்களிலும் முன்புற கண்ணாடி உடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து மானூர் போலீசார் விசாரிக்கின்றனர்.நெல்லை ஜங்ஷனில் இருந்து ராஜவல்லிபுரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் மீது கரையிருப்பு ஸ்டாப் அருகே பைக்கில் வந்த இருவர் கல் வீசினர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். 3 இடங்களிலும் ஒரே நபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ராமதாஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இச்சம்பவங்கள் நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.