தூத்துக்குடி: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி ஏப்ரல் மாதம் அனைத்து சமுதாய பேரியக்கம் நடத்தக் கூடிய பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அரசியல் கட்சிகளின் மவுனம் கலையும் என்று தூத்துக்குடியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.தூத்துக்குடியில் அனைத்து சமுதாய பேரியக்க கூட்டம் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. தேவர் ஒருங்கிணைப்புக்குழு எஸ்.ஆர் தேவர் வரவேற்றார். பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, கொங்கு வேளாளர் கவுண்டர் ஒருங்கிணைப்புக்குழு நாகராஜ், தேவர் ஒருங்கிணைப்புக்குழு அரசகுமார் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பல்வேறு ஜாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் தவறான பயன்பாட்டில் இருந்து அப்பாவி சமுதாய மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காதல் நாடகங்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களை பாதுகாக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவினர் பகுதியில் வாழும் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காதல் நாடக திருமணங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது;சாதாரண இயக்கமாக ஆரம்பித்த இயக்கம் இன்றைக்கு பேரியக்கமாக உருவெடுத்துள்ளது. இதுவரை 17 மாவட்டங்களுக்கு சென்று அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்தை நடத்தி முடித்த பிறகு 18வது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.எஸ்.சி. எஸ்.டி பிரிவில் மொத்தம் 76 உட்பிரிவுகள் உள்ளன. எங்கள் இயக்கத்தை பொறுத்தமட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் கிடையாது. இந்த உட்பிரிவுகளில் சிலர் காதல் என்று நாடகமாடி பணக்கார பெண்களை குறி வைத்து அறியாத வகையில் அவர்களை காதலித்து பெற்றோர்களிடம் பணம் பறிக்கின்றனர். இதனை தான் நாங்கள் எதிர்க்கிறோம். காதல் திருமணங்களை நாங்கள் என்றும் எதிர்க்கவில்லை. சமுதாய பேரியக்கம் ஆரம்பித்த பிறகு மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெரிய அளவில் சமுதாய பேரியக்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன் பிறகு தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் இது சம்பந்தமான தீர்மானங்களை அளித்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியறுத்துவோம்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தான் அரசியல் கட்சிகள் இது சம்பந்தமாக மவுனத்தை கலைக்கும். ஒரு கட்சியில் சேர்வதும் விலகுவதும் அவர்களது விருப்பத்தை பொறுத்தது தான். அதன்படி எங்கள் கட்சியில் இருந்து தலித் அமைப்பினர் விலகுவது அவர்கள் விருப்பம். எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை நாங்கள் அதனை கண்டுகொள்ளவும் இல்லை. பொருட்படுத்தவும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேசிய சமுதாய தலைவர்கள் பலர் நீண்டகாலமாக தாழ்தப்பட்டோருக்கு இருந்து வரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டை தடை செய்ய வேண்டும் என்று என்று ஆவேசமாக பேசினர். கூட்டம் முடியும் வரை அந்த பகுதியில் கடும் பரபரப்பு காணப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஜாதிகளின் பெயர்களை ராமதாஸ் பட்டியலிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.