கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் செயினை பறித்த
போலீஸ்காரரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து
கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி
பாரதிநகரை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் செந்தில்குமார் (36). இவர் நேற்று
முன்தினம் இரவில் (ஜன.29) வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய உறவினர்
பெண்ணான செல்வி என்பவரை அழைத்து வர மோட்டார் பைக்கில் கோவில்பட்டி கூடுதல்
பஸ் ஸ்டாண்ட் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செல்வியை அழைத்துக் கொண்டு
கோவில்பட்டி நகரை நோக்கி பைக்கில் வந்தபோது, இளையரசனேந்தல் ரோட்டில்
மூன்றுபேர் கொண்ட கும்பல் வழிமறித்ததாக கூறப்படுகிறது. மேலும் அக்கும்பல்
கத்தியை காட்டி மிரட்டி செல்வியின் கழுத்தில் கிடந்த சுமார் 2 பவுன் செயினை
பறித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கத்தியை காட்டி மிரட்டி செயின்
பறிக்கும் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அக்கும்பலை விரட்டி பிடித்தனர்.
ஆனால் அதில் ஒருவர் மட்டுமே பிடிபட்டதில், அவரை கோவில்பட்டி மேற்கு
போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பிடிபட்ட
நபர் காவேரிமணி என்பதும், அவர் மேற்கு போலீஸ் ஸ்டேசனில் போலீசாக வேலை
செய்து வருவதும் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து செந்தில்குமார் மேற்கு
போலீசில் புகார் செய்தார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.