திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல் முறையாக ஜனவரி மாத வருமானம் ரூ.3 கோடியைத் தாண்டியது. கடந்த 2012 ஜனவரி மாத வருமானத்தை விட ரூ 1 கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 926 கூடுதலாகும்.தங்கம் 1 கிலோவையும்,வெள்ளி 13 கிலோவையும் தாண்டியது.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானது மாதத்திற்கு இரண்டு முறை எண்ணப்படுகிறது. கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணைஆணையர் சுதர்சன்,தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை,அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா, ஆயவர் முருகானந்தம், தலைமை கணக்கர் பட்டுராஜா உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் ஆகியோரது முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இம்மாதம் ஜனவரி 9ம் தேதியன்றும் ஜனவரி 28,29ம் தேதிகளிலும் உண்டியல் எண்ணப்பட்டது.ஜனவரி 9ம் தேதியன்று உண்டியல் வருமானம் ரூ.52 லட்சத்து 32 ஆயிரத்து532 ஆகும்.ஜனவரி 28ம் தேதியன்று எண்ணப்பட்ட உண்டியல் வருமானம் ரூ.69 லட்சத்து 32 ஆயிரத்து 001ம் ஜனவரி 29ம் தேதியன்று எண்ணப்பட்ட உண்டியல் வருமானம் ரூ.22 லட்சத்து 09 ஆயிரத்து 154ஆகும். மேலும் கோசாலை உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 207ம், திருக்கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.10 லட்சத்து 25,667ம், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.17,977, சிவன் கோயில் உண்டியல் மூலம் ரூ.3,323ம், நாசரேத் அன்னதானம் உண்டியல் மூலம் ரூ.1,729ம் கிருஷ்ணாபுரம் கோயில் அன்னதானம் உண்டியல் மூலம் ரூ.5,834ம் மற்றும் 355 வெளிநாட்டு கரன்சிகளும் வரவாகியிருந்தது.மொத்தமாக உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 85 ஆயிரத்து 424ம் 1298 கிராம் தங்கமும், 13,283 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது. மணியடி தரிசன டிக்கெட் மூலம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 05 ஆயிரத்து 960 ம், விடுதி பிரிவுகள் மூலம் ரூ.40 லட்சத்து 34,573ம் திருக்கோவிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது ஜனவரி மாதத்தில் உண்டியல், மணியடி தரிசனம் மற்றும் விடுதி பிரிவுகள் மூலமாக ரூ.3 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரத்து 957 திருக்கேவிலுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2012 ஜனவரி மாதத்தை விட ரூ.1 கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 926 கூடுதலாகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.