திருநெல்வேலி:
பாளை.யில் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.பாளை. ஜான்ஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த
மாணவிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக சில நாட்கள் மாணவி
விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பிய
மாணவியை, முதல்வரை பார்த்து அனுமதி பெற்று வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக விடுமுறை எடுத்த மாணவியை முதல்வர் ஆபாச வார்த்தைகளால்
திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக மாணவர்களிடம் பாதிக்கப்பட்ட
மாணவி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து
நேற்று காலையில் இந்திய மாணவர்
சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமையில் மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் நடத்திய போராட்டத்தில்
முதல்வர் கார் சேதமடைந்தது.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ""மாணவியை
ஆபாசமாக திட்டிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம்
தொடர்பாக மாணவர் ஒருவரை முதல்வர் நீக்கியுள்ளார். மாணவரை மீண்டும்
கல்லூரியில் சேர்க்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். இந்த
சம்பவம் குறித்து விபரம் கேட்ட முதல்வரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன்
சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.