களக்காடு: களக்காடு புலிகள் காப்பக வனக் குழுக்களில் உள்ள கணக்காளர்கள் இருவர் 21.30 லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி எம்.பியிடம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் மனு கொடுத்துள்ளார்.களக்காடு புலிகள் காப்பகத்தில் நடந்த ரூ.21 லட்சம் மோசடி குறித்து கூறப்படுவதாவது:களக்காடு புலிகள் காப்பகத்தில் 108 வனக் குழுக்கள் உள்ளன. களக்காடு பகுதியில் இயங்கிவரும் வனக்குழு கிராமங்களான புலவன்குடியிருப்பு, தம்பிதோப்பு, மேலபத்தை, கலுங்கடி, ஜெகஜீவன்புரம், பூதத்தான்குடியிருப்பு ஆகியவற்றில் கணக்காளராக பணிபுரிந்தவர் களக்காடு சமாதானநகரை சேர்ந்த சேகர் மகள் ஜேஸ்மின் சுகன்யா. இவர் வனக்குழுவிற்கு வந்த 13 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை கணக்கில் கட்டாமல் மோசடி செய்துள்ளார். இதே போல் மேலக்கருவேலன்குளம், நாகன்குளம், தெற்குபத்மநேரி, குடில்தெரு, வடமலைசமுத்திரம், பத்மநேரி ஆகிய வனக்குழு கணக்காளராக பணிபுரிந்தவர் நகர தெருவை சேர்ந்த ஜான்ராஜ் மனைவி ஜெயகிரேஷ்மேரி.
இவர் வனக்குழு ரூபாய் 7 லட்சத்து 89 ஆயிரத்து 850 ரூபாயை மோசடி செய்துள்ளார்.மேற்படி இருவரும் வனக்குழு கடன் வகைக்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விருவர் மீதும் களக்காடு போலீசில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டுள்ளது.தற்போது இவர்கள் வழக்குகளிலிருந்து தப்பவேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்த பணத்தை மீட்டு தருமாறு மாவட்ட எஸ்.பி.,யிடம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர், ரேஞ்சர் திருவேங்கடம், வனவர் பாலையா ஆகியோர் புகார் மனு கொடுத்துள்ளனர்.இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் கூறுகையில் இவ்விருவர் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.