மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகருக்குள் நுழைய அசாதுதீன் ஓவாய்சிற்கு அம்மாநில போலீசார் தடை விதித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான அக்பருதீன்ஓவாய்சிஸ். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் அடிலாபாத், நிஜமாத் நகரங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில், இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அடிலாபாத் சிறையில் உள்ளார். இந்நிலையில் அக்பருதீனின் சகோதரரும் ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவாய்சிஸ், இவர் மீது 2005-ம் ஆண்டு அரசு அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் வரும் பிப்.1-ம் தேதி முதல் மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் உள்ளிட்ட சில நகரங்களில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச திட்டமிட்டார். இன்று அவுரங்காபாத் வர உள்ளார். இதையடுத்து அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் , அசாதுதீன், நகருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.முன்னதாக அசாதுதீன் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் , பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரியும், அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகவும், இம்மாதம் 26-ம் தேதி, அவுரங்காபாத் நகர மும்பை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 144 தடையுத்தரவும், அவுரங்காபாத் நகருக்குள் ,அசாதுதீன் நுழைய தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார்..
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.