மெல்போர்ன்: ஆஸ்திரேலிய செனட் சபை தேர்தலில் ஜூலியன் அசஞ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசஞ் (41).இவர் விக்கிலீக்ஸ் இணையதளம் வாயிலாக அமெரிக்கா மேற்கொண்ட போர் தொடர்பாக ஆயிரக்கணக்கான ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார். சுவீடனில் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தஞ்சமடைந்துள்ளார். அவரை நாடு கடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்ட் சபைக்கு வரும் செப்டம்பரி்ல் தேர்தல் நடக்கிறது. இதில் ஜூலியன் அசஞ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.சுவீடனுக்கு நாடு கடத்தும் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் எப்போது ஆஸ்திரேலியா சென்று போட்டியிட உள்ளார் என்பது குறித்த தகவல் இல்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.