film actor sharuk statement | பாதுகாப்பாக உள்ளேன் வாய் திறந்தார் நடிகர் ஷாருக்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பாக உள்ளேன் வாய் திறந்தார் நடிகர் ஷாருக்

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாதுகாப்பாக உள்ளேன் வாய் திறந்தார் நடிகர் ஷாருக்

மும்பை:""நான் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளேன்; யாருடைய, தேவையற்ற ஆலோசனையும் எனக்கு தேவையில்லை,'' என, பாலிவுட் நடிகர், ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் குறித்து கட்டுரை எழுதிய நடிகர் ஷாருக் கான், "பிரபலமான நபராக இருந்த போதிலும், முஸ்லிம் என்பதால், தான் அவ்வப்போது, அரசியல் கட்சிகளால் மிரட்டப்பட்டேன்; என் தந்தை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் என்ற நிலையிலும், என்னை பாகிஸ்தானுக்கு விரட்ட சிலர் முயன்றனர்' என எழுதியிருந்தார்.அவருக்கு ஆதரவு தெரிவித்து, பாகிஸ்தானின், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக் ஆகியோர் குரல் கொடுத்தனர்.

அந்த அண்டை நாட்டு ஆதரவு குரல்களுக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம், ஒரு வாரமாக நடந்து வந்த போதிலும், வாய் திறக்காமல், மவுனியாக இருந்த நடிகர் ஷாருக் கான், நேற்று வாய் திறந்தார்.

மும்பையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:நான் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளேன்; யாருடைய, தேவையற்ற ஆலோசனையும், ஆதரவும் எனக்கு தேவையில்லை. என் நாட்டில் உள்ள ஜனநாயகம், எனக்கு சுதந்திரமான மதச்சார்பற்ற வாழ்க்கையை மேற்கொள்ள அனுமதிக்கிறது.இந்த குழப்பம் ஏன் ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை.

நான் சில மதவாத சக்திகளை பற்றி தான் குறிப்பிட்டிருந்தேன். அதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என குறிப்பிடவே இல்லை.கடந்த, 20 ஆண்டுகளாக, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் என்னை ஆராதித்து வருகிறார்கள். எனக்கு இந்தியாவில் எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
31-ஜன-201310:50:48 IST Report Abuse
P. Kannan வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்.
Rate this:
Share this comment
Cancel
SENTHIL - Pollachi,இந்தியா
31-ஜன-201310:47:18 IST Report Abuse
SENTHIL அங்கு யாரோ சிலரால் அவருக்கு ஆபத்து என சொன்னார். இங்கோ பலராலும், அரசாளுமே ஒரு மகா கலைஞனுக்கு ஆபத்து.... இந்தியாவின் நிலையை என்ன சொல்லுவது?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜன-201310:39:56 IST Report Abuse
Swaminathan Nath இது தேவை அற்ற விளம்பரம்.
Rate this:
Share this comment
Cancel
Poor Patriot - bangalore,இந்தியா
31-ஜன-201310:02:44 IST Report Abuse
Poor Patriot இவனெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு உருவாக்கி விட்டுட்டு.. கன்றாவி.. இன்னும் இப்படி எத்தனை விஷயங்கள பாக்கனுமோ..
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
31-ஜன-201309:59:46 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy Weldone sharukh Andai maanila amaicharukku mookkai kaanumaam Konjam kamalukku sollikodum Sila theeya sakththiyin aalosanaiyai kettu avasthai padugiraar Ippadi jayaavukkum thanakkum oru purachchinai illainu theeyasakththikku nose cut kodukka sollavum
Rate this:
Share this comment
Cancel
mathanraj - chennai  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201308:50:56 IST Report Abuse
mathanraj இந்தி்யாவில் இந்துக்கள் தவிர அனைவரும் பாதுகாப்பாகவும் சகல உறிமைகழோடும் வாழ்கிறார்கள்இதுவே இந்ததி்யா
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
31-ஜன-201308:15:00 IST Report Abuse
villupuram jeevithan இதை சொல்ல இவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏன்? பாதுகாப்பிற்கு பாக்கிற்கு வந்து வசிக்க வாருங்கள் என்று சொல்லும் நிலை ஏன் ஏற்பட்டது?
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
31-ஜன-201307:37:41 IST Report Abuse
Raj டூ லேட்
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
31-ஜன-201306:53:25 IST Report Abuse
Guru எழுத்துபூர்வமாக பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவிட்டு வாய்மொழியில் நான் பாதுகாப்பாகதான் உள்ளேன் எற்று சொல்லிருக்கிறார்... வாயிசொல்லில் வீரரரடி கிளியே வாயிசொல்லில் வீரரரடி கிளியே
Rate this:
Share this comment
Indian Boys - chennai,இந்தியா
31-ஜன-201311:10:05 IST Report Abuse
Indian Boysமொக்க பயலே இஸ்லாமிய நாட்டுல இருந்துகொண்டு ..ஏகதாளம் பேசுகிறாய ......
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
31-ஜன-201306:42:45 IST Report Abuse
ஆரூர் ரங தாவூத் இப்ராஹிம் இருக்கும் வரை சஞ்சய் தத் மற்றும் கான் நடிகர்களுக்கு பாதுகாப்புக்கு என்ன குறை? அந்த அயோக்கியனாலையும் அவரோட வாலான காங்கிரசாலயும் . எங்க நாட்டின் பாதுகாப்புக்குத்தான் எப்போதும் ஆபத்து
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
31-ஜன-201307:52:35 IST Report Abuse
மதுரை விருமாண்டி"அவர் எழுத்து பூர்வமாக சொன்னதிலும் அர்த்தம் உள்ளது" என்பதற்கு மேலே உள்ல காவி ஆதங்கவாதி ஒரு உதாரணம்.. இந்த மாதிரியான ரணங்கள் தான் வேதனை அளிக்கும், வெறுப்புடன் எழுதச் சொல்லும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை