ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில பா.ஜ., கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே. கடந்த 2008-ம் ஆண்டு வரை மாநில முதல்வராக பதவிவகித்து வந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து மாநிலத்தின் எதிர்கட்சி தலைவரானார். இருப்பினும் மாநில தலைவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்நார். இந்நிலையில் தலைநகர் டில்லியில் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இதனையடுத்து மாநில தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகி்றது. 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள மாநில தேர்தலில் இவர் தலைமையேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்-இயக்கத்தை சேர்ந்தவரும், முன்னாள் உள்துறை அமைச்சராக பணியாற்றியவருமான குலாப் சந்த் கட்டாரியாவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.