Supreme Court for peaceful burial to world’s longest litigation | சுப்ரீம் கோர்ட்டில் 143 வருடங்களாக நிலுவையில் உள்ள உலகின் மிக நீண்ட வழக்கு| Dinamalar

சுப்ரீம் கோர்ட்டில் 143 வருடங்களாக நிலுவையில் உள்ள உலகின் மிக நீண்ட வழக்கு

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Supreme Court,peaceful, burial,world’s, longest, litigation,சுப்ரீம் கோர்ட்டில், 143 வருடங்களாக, நிலுவையில்,உலகின், மிக நீண்ட, வழக்கு

புதுடில்லி : ஒரு வழக்கை சுமார் 143 வருடங்களாக சுப்ரீம் கோர்ட் மிக நிதானமாகவும், அமைதியாகவும் விசாரித்து வருகிறது. இதுவே உலகின் மிக நீண்ட வழக்காக கருதப்படுகிறது. 1878ம் ஆண்டு கல்லறையில் வழிபாடு நடத்தும் உரிமை தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கு நீதிக்காக சுப்ரீம் கோர்ட்டை அனுகி உள்ளது. இவ்வழக்கில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை.


வழக்கு விபரம் :

1878ம் ஆண்டு வாரணாசியில் 8 மனைகள் மற்றும் 2 கல்லறைகளைக் கொண்ட இடத்தில் வழிபாடு நடத்துவது ‌தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் வழக்கும் தொடர்ந்தனர். தொடர்ந்து 1981ம் ஆண்டு வரை வழக்கு விசாரணையும், மோதல்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் 1981ம் ஆண்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் வழிபாட்டு உரிமை இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்க மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இறுதி வாய்ப்பு அளித்தது.


நீதிபதிகள் கேள்வி:

நேற்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் ஏ.ஆர்.தவி,விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் முன் நடைபெற்றது. அப்போது இந்த தகராறு எதற்கு, 1981ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்காதது ஏன், சுப்ரீம் கோர்ட்டின் கட்டளைகளை நிராகரித்தது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் இர்ஷத் அகமதிடம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த உத்திர பிரதேச அரசை அறிவுறுத்தாமல் 35 ஆண்டுகளாக இவ்வழக்கு மீதான மேல்முறையீடு மனுவை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.


சுப்ரீம் கோர்ட் நழுவல் :

இது மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்பதால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்ட நடைமுறை சிக்கல்களை நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக் கொண்டது. பின்னர் தெரிவித்த நீதிபதிகள், பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் எனவும், அதற்கு மேலும் சில காலம் எடுத்தாலும், பிரச்னை முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரச்னைக்குரிய நிலத்தை இரு தரப்பினருக்கும் சமமாக பிரித்தளித்து, அது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லறைக்காக சண்டையிட்டு கொள்ளாமல் அமைதி காக்கவும், சுமூகமாக செல்லவும் இருதரப்பினரையும் சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayabalan - chennai ,இந்தியா
02-பிப்-201307:15:09 IST Report Abuse
jayabalan வேறு ஒரு வழக்கு இந்த இழுபறியை மிஞ்சி மேலும் பல ஆண்டுகள் முடிவில்லாமல் நின்று கின்னஸ் சாதனை புரிந்து பட்டம் பெறலாம் ஆனால் அதைக் காண நாம் தான் இருக்கப் போவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Selva T - chennai,இந்தியா
01-பிப்-201321:11:09 IST Report Abuse
Selva T இன்னும் 143 வருஷம் ஆனாலும் கதை அப்படியே தான் இருக்குமா? இது நிஜ வாழ்க்கையில் நடக்கும் தினத்தந்தி சிந்துபாத் கார்டூன் மாதிரியா? ...கதை நகரவே நகராதா?
Rate this:
Share this comment
Cancel
shanmugam palanisamy - MOHANUR,இந்தியா
01-பிப்-201308:26:47 IST Report Abuse
shanmugam palanisamy அனைவரும் மிக சரியாக கருத்துகளை பதிவு செய்து உள்ளனர். இதுதான் இந்தியா.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
01-பிப்-201306:55:28 IST Report Abuse
Guru கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்றாங்களோ
Rate this:
Share this comment
Cancel
Varatharajan - Oslo,நார்வே
31-ஜன-201318:20:43 IST Report Abuse
Varatharajan 33 வருடங்கள் முடிந்தால் ஒரு தலை முறை மாறுது என்று கூறும் நாட்டிலா? ஆகா வாழ்த்துக்கள் 5 வது தலை முறை முடியும் தருவையிலாவது இந்த வழக்கு முற்று பெற்று, நீதி பெற்று, அமைதிக்கு திரும்பினால் சந்தோசம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
31-ஜன-201316:28:16 IST Report Abuse
K.Sugavanam வழக்குகளுக்கும் எக்ஸ்பைரி டேட் வெக்கணும்.அதுக்குள்ள முடியலைன்னா வாதி,பிரதிவாதி ரெண்டு போரையும் ஒரே சிறையில அவங்க ஒத்து போற வரைக்கும் அடைச்சு வெச்சுடலாம்.தலை வலி தீர்ந்தது.வெளில பிரச்சனை வராது..
Rate this:
Share this comment
jayabalan - chennai ,இந்தியா
01-பிப்-201307:06:27 IST Report Abuse
jayabalanரெண்டு பேரையும் ஒரே சிறையிலா? ஒருவரை ஒருவர் விட்டு வைப்பார்களா? ஒருவர் உயிர் விடுதலை ஆகிவிடும் விரைவில்...
Rate this:
Share this comment
Cancel
AlaguMuthu - riyadh,சவுதி அரேபியா
31-ஜன-201315:34:37 IST Report Abuse
AlaguMuthu நான் எழுத வேண்டும் என நினைச்சதை எல்லாம் முன்னால் எழுதிய நண்பர்கள் வெளுத்து வாங்கி விட்டார்கள். இவ்வளவையும் பார்த்த பிறகாவது நீதி துறைக்கு சொரணை வருமுன்னு நினைக்கிறீங்க. ம்ஹூம்.
Rate this:
Share this comment
Cancel
வாசுதேவன் - சென்னை,இந்தியா
31-ஜன-201315:10:36 IST Report Abuse
வாசுதேவன் பேராசை மற்றும் தனி மனித ஒழுக்கம் நம்மிடையே இல்லையென்றால் இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் இந்த மாதிரி வழக்குகள் முடியாது.
Rate this:
Share this comment
Cancel
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201313:08:20 IST Report Abuse
அரசன் சட்டம் ஒரு இருட்டறை
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
31-ஜன-201312:08:35 IST Report Abuse
Raj நீதி உறங்கவில்லை .... கோமாவில் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை