புதுடில்லி : பிப்ரவரி 3ம் தேதி நடைபெற உள்ள 6 வது ஐபிஎல்., கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் இடம்பெறும் 101 வீரர்கள் அடங்கிய பட்டியல் தயாராகி உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் தற்போதைய கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் விலை 400,000 டாலர்கள் ஆகும். கிளார்க் புனே வாரியர்ஸ் அணிக்காகவும், பாண்டிங் கோல்கட்டா அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். இந்த பட்டியலில் 7 இந்திய வீரர்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். இருப்பினும் இப்பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களே ஆதிக்கம் பெற்று முன்னிலையில் உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.