Maintaining law and orde is my first priority: Jaya | சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (233)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Maintaining law and orde is my first priority: Jaya

சென்னை: ஒரு முதல்வராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும், தனக்கு நடிகர் கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.


இதனிடையே, சில முஸ்லிம் அமைப்புகள் நேற்று நடிகர் கமலை சந்தித்து பேசினர். அப்போது விஸ்வரூபம் படத்தில் உள்ள சில ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனக்கும், தனது முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார். படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதை வரவேற்ற மற்ற முஸ்லிம் அமைப்புகள், எந்த காட்சிகள் நீக்கப்படவுள்ளன என்பது குறித்து தங்களுடன் ஆலோசிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, மாநில டி.ஜி.பி., ராமானுஜம், தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கடந்த சில நாட்களாக, விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எதையும் முறையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதையடுத்து, இதற்கு விளக்கமளிப்பது எனது கடமை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது முதல் கடமை. இதை சிலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்களது வேலைகளை செய்ய வேண்டும். விஸ்வரூபத்திற்கு அனுமதி அளித்திருந்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையின் காரணமாகவே அப்படம் தடை செய்யப்பட்டது. அதை மீறி, அது திரையிடப்பட்டிருந்தால், வன்முறை ஏற்பட்டிருக்கும். தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியாகும் 524 தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 31 ஆயிரத்து 440 போலீசார் தேவை. ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 91 ஆயிரத்து 807 தான். அசம்பாவிதங்களை தடுப்பது தமிழக அரசின் கடமை. நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே படம் தடை செய்யப்பட்டது. ஜெயா டி.வி., அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த டி.வி.,யில் எனக்கோ, அ.தி.மு.க.,வுக்கு எந்த பங்கும் இல்லை. மேலும், கமல் மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. கடந்த 1980ம் ஆண்டுகளில் நடந்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறும் விஷயங்கள் மிகவும் கேலியானது. அப்படி ஒரு கடிதத்தையே நான் எம்.ஜி.ஆருக்கு எழுதவில்லை. எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த எனக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்த கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பேன். வேட்டி கட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவார் என கமல் பேசியதாலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. நான் கடந்த 30 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். யார் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நாட்டிலுள்ள 100 கோடி மக்களே பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். கமல் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர் எனக்கு போட்டியாளரும் இல்லை. எனவே இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது உண்மையல்ல. சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. கமல் பெரிய முதலீட்டில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை விமர்சித்திருக்கும். அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது. இருதரப்பும் சுமூகமாக பேசி இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ள முன்வந்தால், தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (233)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
04-பிப்-201301:01:50 IST Report Abuse
Sundeli Siththar சரியான வார்த்தைகள்... கருணாவின் சுயரூபம் தெரிந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201316:40:37 IST Report Abuse
SK2011 Karunanidhi behaves like a third rated politician.. His statement and guidance to Kamal Hasan is also responsible for making the issue big.It is high time Karunanidhi should shut his mouth in this kind of sensitive issues which could even cost lives in due course. Karunanidhi "s attempt to turn the people support once again exposed and proving to be a failure..A leader who has been a CM for five times of the state talks in such a unjustifiable manner and even after totally got routed in the last election behaves like a "Koothula Komaali" ..( a street commedian)
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201316:28:26 IST Report Abuse
SK2011 ஜெயலலிதா எடுத்த முடிவு மிகவும் சரியானது. யார்யாரெல்லாம் கடந்த 2-3 நாட்களாக முட்டாள்தனமாக அறிவுகட்டதனமாக பேச தகுதி இல்லாத அரடிக்க்கட் எல்லோரும் இப்பொழுது சிந்தித்து பதில் கூரிஆகவெண்டும்.. மக்கள் தான் முக்கியம். அப்படி மக்களுக்கு ஆபத்து வந்தால் கலவரம் வெடித்து கமல் தன் விரலை கூட ஆட்டமுடியாது.. ஜெயலலிதா அம்மையார் கடந்த தேர்தலில் மக்கள் தேர்டு எடுத்தது அவருடைய சிறப்பான சட்டம் ஒழுங்கு தான் ஒரு முக்கிய காரணம். இந்த விசயத்தில் எந்த ஒரு தலைவருக்கும் துப்பு இல்லை. உண்மையை சொல்லபோனால் இந்த கேடுகெட்ட கருணாநிதி ஒரு கலவரத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்துள்ளார். கருணாநிதியால் மக்களுக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் உபுத்ரம் செய்யாமல் ஒரு பெட்டி பாம்பை போல் ஒரு மூலையில் இருப்பது நல்லது..
Rate this:
Share this comment
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
01-பிப்-201307:47:42 IST Report Abuse
T.sthivinayagam முதலில் தடை, பிறகு மேல் முறைஇடு, பிறகு சமாளிப்பு ,வருத்தம் தான் மீதம்
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-பிப்-201313:00:04 IST Report Abuse
மதுரை விருமாண்டிபின்னால் வரப் போகுது பெரிய ஆப்பு... அதை ஆஃப் செய்யத் தான் இந்த பாதுகாப்பு... ...
Rate this:
Share this comment
Cancel
T. Rajendrakumar - Tiruchirappalli,இந்தியா
01-பிப்-201306:18:27 IST Report Abuse
T. Rajendrakumar நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பொய்யாமோ ? அஞ்சு தலை பாம்பென்பான் அப்பன் ஆறு தலை யென்றுமகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்திடுவார் நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
Rate this:
Share this comment
Cancel
T. Rajendrakumar - Tiruchirappalli,இந்தியா
01-பிப்-201306:11:24 IST Report Abuse
T. Rajendrakumar நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
Rate this:
Share this comment
Cancel
????????? - Chennai,இந்தியா
01-பிப்-201302:12:29 IST Report Abuse
????????? முதல்வரின் இந்த பத்திருக்கையாளர் சந்திப்பு பல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. 1. முஸ்லீம்கள் நேர்மையாகவும், சட்டப்படியும் தங்களின் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். 2. தமிழர்களுக்கு உள்ள சினிமா மோகம். ஆகவே இத்தகைய பலம் வாய்ந்த ஊடகத்தை திரைப்பட துறையினர் எப்படி சமூகப் பொறுப்போடு கையாள வேண்டும் என்ற உண்மை. 3. எல்லா துறைகளையும் போல் தணிக்கை துறையிலும் எப்படி உழல் மலிந்துள்ளது என்ற உண்மை. 4. முஸ்லீம்களின் இந்த போராட்டம் பல்வேறு மொழி, நம்பிக்கைகள், கலாச்சாரங்களை கொண்ட நம் நாட்டில் கருத்து சுதந்திரம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கருத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அதனால் நம் ஜனநாயகம் முதிரவும் மற்ற நாடுகளுக்கு இது வழிகாட்டியகவும் அமையும். 5. இந்த போராட்டத்தை இந்து முஸ்லீம் பிரச்சனையாக ஆக்க முயன்று அதில் குளிர்காய நினைத்த சமூக விரோதிகளுக்குத் தான் பின்னடைவு.
Rate this:
Share this comment
Cancel
rudhran - Kumbakonam,இந்தியா
01-பிப்-201300:44:23 IST Report Abuse
rudhran முதலில் இந்த விவகாரத்தில் முதல்வரின் போக்கு சரியல்ல என்று நான் நினைத்தேன். ஆனால் இன்று முதல்வர் கொடுத்த நீண்ட விளக்கம், அனைவரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொண்டுள்ளது. கமல் தரப்பு நீதிமன்றம் செல்லும் முன்பு, அரசிடம் ஒரு பேச்சுவார்த்தை நடத்திருந்தால் கூட நல்லதுதான். இப்பொழுதாவது பிரச்சனை முடிவுக்கு வந்ததால் சரி.
Rate this:
Share this comment
Cancel
mani.kmu9 - madurai  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-201300:30:10 IST Report Abuse
mani.kmu9 People have changed atonce by believing a single interview...Innocent people...If she would not have given this statement,this will cause her to lose in the PM elections.. Thats why she is trying to be on safe side..Anyway kamal has loss of 30 crores..
Rate this:
Share this comment
Cancel
jai jai - kovai,இந்தியா
31-ஜன-201319:50:31 IST Report Abuse
jai jai இந்த படம் தடை செய்த உடன் இந்த விளக்கம் கொடுத்து இருக்கலாமே ஏன் இவ்ளோ நாள் இத பத்தி பேசல மேடம்.கருணாநிதி பெசனால்தான் நீங்க பேசுவீர்களா மேடம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை