Lokpal Bill with amendments cleared by Cabinet | திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (8)
Advertisement
Lokpal Bill with amendments cleared by Cabinet திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் இந்த புதிய மசோதாவை நிராகரிப்பதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேராட்டம் நடத்தியதை அடுத்து, ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக் பால் மசோதாவை, பார்லிமென்ட்டில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த மசோதா, லோக்சபாவில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவில் இடம் பெற்றுள்ள, குறிப்பிட்ட சில விதிமுறைகளுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, "மாநிலங்களில், ஊழலுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும், லோக் ஆயுக்தா என்ற அமைப்பை ஏற்படுத்துவது, கட்டாயம்'என, கூறப்பட்டிருந்த விதிமுறைக்கு, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதே போல், "சி.பி.ஐ.,யை, லோக் பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்' என்று, பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ., வலியுறுத்தியது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், ராஜ்யசபாவில் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, இந்த மசோதா, ராஜ்யசபா தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, லோக் பால் மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக, 16 பரிந்துரைகளை தேர்வுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்து. இந்த பரிந்துரைகளில் 14 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 பரிந்துரைகளை நிராகரித்துள்ளது.

இக்குழுவின் சில பரிந்துரைகள் வருமாறு:


1) ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென லோக் ஆயுக்தா அல்லது ஊழல் தடுக்கும் அமைப்பை ஓராண்டிற்குள் ஏற்படுத்த வேண்டும்.


2) சமயம் சார்ந்த அமைப்புகள், தொண்டு நிறுனங்கள், அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை லோக்பால் வரம்பிற்கு வராது.


3) அரசியல் கட்சிகளும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரப்படாது.


4) லோக்பால் தேர்வுக்குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட 4 பேர் இடம்பெறுவர். இந்த குழுவுக்கு ஜனாதிபதி அனுமதி அளிப்பார்.

இரண்டு திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க வில்லை. சி.பி.ஐ., இயக்குநர் தேர்வில் மாற்றம் தேவை என்ற பரிந்துரை ஏற்கப்படவில்லை. அதே போல், லோக்பால் அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு அதிகாரியை வழக்கில் துவக்க நிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா அடுத்த மாதம் நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனினும் இந்த மசோதாவுக்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது முக்கிய கோரிக்கையான, பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thirumalai chari - chennai,இந்தியா
01-பிப்-201310:22:49 IST Report Abuse
thirumalai chari LOKPAL This Parallel Panel for Governance is today no more the interest of People. Justice delayed has been thus far seen by people as Justice Denied, but from now on it will be seen as Justice detained. Justice that was seek, if not given in time, then tem that is believed to rer will be discarded, isolated & neglected. People have gone even to the extent of anticipating that this Parallel Panel, that was insisted then would be just another extra window of Corruption. Either Congress or BJP is today seen to be the one and same. Their Strategy to act, FRIS TACIT, FOES PUBLIC has been exposed several times. People of India, hence want both the DEVIL & EVIL out of Governance, if at all they decide to afford the extravagant establishment at Center in the future. All Indian Current Problems in India is due to the INFRASTRUCTURE that was meant PROSPERITY for the People, has been POCKETED by GREEDY FEW. The SCAMS exposed with consent or without consent is not the question, but these definitely support the fact that the GREEDY FEW have deprived INDIAN CONSOLIDATION beyond doubt. And this is the actual cause of HUGE INFLATION in INDIA. Governments, knowingly, unknowingly pushed to the Brink to do a job of hoarding, blackmarketing ENERGY and ESSENTIALS to the ordinary common, contributing man. Reserve Bank of India by cutting its control over institutions will not solve any problem in India. It is RETRIEVAL OF LOOT only can put INDIA back on its heels. But does the Government has spine and enough will to do this. A Big No, because the Pecuniary man(Politicians and Political Parties) cannot afford this. The thirst to retain Power Blinds their eyes. People of India have to cont or will be forced to cont with Congress rule in collusion with its Partner BJP for another one year fatefully, if not fatally. Indians at the moment, I feel LAG, but not totally OUT. While BACK TO 1991 stares at us, we have enough strength to retain stature, a PASSIVE ONE , if not an ACTIVE one for at least a DECADE, to recuperate to proceed with our objective to become strongest Nation Globally. To Conclude, Indians will have a LOKPAL ruling the Country soon. My LOKPAL means an elected one comprising of service minded INTELLECTUALS.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Venkatraman - denver,பெல்ஜியம்
01-பிப்-201310:00:13 IST Report Abuse
Srinivasan Venkatraman சிபிஐ சுதந்திரமாக தனியாக யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இயங்க வேண்டும்.இல்லை என்றல் லோக்பால் நிறை வேற்றி பயன் இல்லை.மக்கள் கருத்தை கேட்பதே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
31-ஜன-201318:45:36 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சமயம் சார்ந்த அமைப்புகள், தொண்டு நிறுனங்கள், அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை லோக்பால் வரம்பிற்கு வராது. "3) அரசியல் கட்சிகளும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரப்படாது."....இப்படி என்றால் லோக்பாலே வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
31-ஜன-201318:43:25 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வந்துட்டாரையா வந்துட்டார் ...இவர் தொல்லை தாங்க முடியலே....
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
31-ஜன-201318:19:48 IST Report Abuse
Wilsonsam Sp இது என்ன முட்டாள் தனமான லோக்பாலா இருக்கு அரசியல் வாதிக்கு தண்டனையே கிடையாத
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
31-ஜன-201317:27:18 IST Report Abuse
Divaharan இது நிறைவேறுமா ? அல்லது நாடகமா?
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
31-ஜன-201317:16:46 IST Report Abuse
v j antony திருடனா பாத்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது ஒரு ஜோக்பால் .....................
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
31-ஜன-201316:46:51 IST Report Abuse
thirumalai chari இன்னும் ஒரு வருஷம் தானே காங்கிரஸ், பா ஜ க பிடியில் இந்திய மக்கள். அதுவரை சகித்துக்கொள்ள வேண்டும் என்று விதி இருந்தால், யார் தான் என்ன செய்ய முடியும். இவர்கள் ஆளுமையில் இருந்து விடுபட்ட பின் லோக்பால் என்ற இணை அரசு தேவையே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை