ஊட்டி:ஊட்டி ரோஜா பூங்காவை, கோடை சீசனுக்கு தயார்படுத்தும் வகையில், கவாத்து பணி துவங்கியுள்ளது. புதிதாக, ஹாலந்து நாட்டு ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஊட்டி ரோஜா பூங்காவில் 3,800 ரகங்களை சேர்ந்த 25 ஆயிரம் ரோஜா செடிகள் உள்ளன. வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் நோக்கில், ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி, நேற்று துவங்கியது.
தோட்டக்கலை இணை இயக்குனர் மோகன், பணியை துவக்கி வைத்து கூறியதாவது:
பொதுவாக, பிப்.,2ம் வாரத்தில் தான் கவாத்து பணி துவங்கும்; ஏபரல் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில், பூக்கள் பூத்து குலுங்க வசதியாக, முன் கூட்டியே கவாத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக அவலாஞ்சி, பீச், தாஜ்மஹால் என்ற பெயரில் மூன்று புதியரக ரோஜா செடிகள், ஹாலந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு, நடவு செய்யப்படவுள்ளன.
பூங்காவுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் நோக்கில், இந்தாண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கூடுதல் கழிப்பிடம் அமைக்க 10 லட்சம், பூங்காவை ஒட்டியுள்ள ஒரு ஏக்கர் கூடுதல் பரப்பில் நடவுப் பணி செய்ய 5 லட்சம், குடிநீர் வசதியை அதிகப்படுத்த 5 லட்சம், ரோஜா செடிகளின் பெயர் தாங்கிய நிரந்தர பலகைகள் வைக்க 2 லட்சம் என, மொத்தம் 22 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோட்டக்கலை துணை இயக்குனர் மணி, ரோஜா பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் மீராபாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.