ஊட்டி:"ஊட்டியில் அதிகரிக்கும் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஊட்டி நகராட்சி கூட்டம், அதன் தலைவர் சத்தியபாமா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
ரவிகுமார்: ஊட்டி மார்க்கெட்டில், 26 மின் கம்பங்களில் இரண்டில் தான் விளக்குகள் எரிகின்றன. 12 கதவுகளில், 10 உ<டைந்துள்ளதால், திருட்டு பயம் அதிகரிக்கிறது. கழிப்பறை, குடிநீர் வசதியும் இல்லை. மார்க்கெட் கட்டடம் இடிக்கப்படும் என்ற தகவல், வியாபாரிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமிஷனர் சிவகுமார் : மார்க்கெட்டில் மின் பராமரிப்பு பணிகள் விரைவில் துவங்கும். மார்க்கெட் கடைகளை புதுப்பிக்கும் திட்ட அறிக்கை, மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது; உடனடியாக கடைகள் இடிக்கப்படாது.
சுசீலா: அரசு மருத்துவமனை கழிவுகள், நடைபாதையில் ஓடுவதால், சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது.
தலைவர்: கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்படும்.
ராஜா முகமது: மார்க்கெட்டுக்குள் மாடுகள் சுற்றுவதால், பாதசாரிகள், வியாபாரிகள் பாதிக்கின்றனர். எனது வார்டில், பயனற்று கிடக்கும் "வாட்டர் ஷெட்' கட்டடத்தில், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
தலைவர்: "வாட்டர் ஷெட்' கட்டடம், வணிக வளாகமாக மாற்றப்படும்.
சம்பத்: எட்டினஸ் சாலையில், "வர்க் ஷாப்'களால் வாகன நெரிசல் அதிகரிக்கிறது; நகராட்சியால் போடப்பட்ட கால்வாய் மீது, தளம் அமைத்து, ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தலைவர்: ஆக்கிரமிப்பு வர்க் ஷாப், கடைகளை அகற்றுவது தொடர்பாக, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
ஜார்ஜ்: வண்டிச்சோலையில் படுமோசமாக உள்ள சாலையால், விபத்துகள் அதிகரிக்கின்றன; சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
தம்பி இஸ்மாயில்: 10 வார்டுகளின் கழிவுநீர், எனது வார்டில் சங்கமிக்கிறது; இதை சரி செய்ய வேண்டும்.
இம்தியாஸ்: நகராட்சி குடிநீரை வீடு, வணிக வளாகம் கட்டுவோர் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துகின்றனர். லோயர் பஜார் சாலையில், வியாபாரிகள் தங்கள் வாகனங்களை நாள் முழுக்க பார்க்கிங் செய்வதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
மாதவன்: நகராட்சி ஊழியர்கள் செய்யும் பணியை கமிஷனர் கண்காணிக்க வேண்டும். பார்க்கில் பிரச்னையை சமாளிக்க நகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மட்டத்திலான கூட்டு குழு கூட்டம் போட்டு, திட்டம் தயாரிக்க வேண்டும்.
கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
விவாதங்களை தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.