குன்னூர் :அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிற்சங்க தேர்தலில், ஐ.என்.டி.யு.சி., கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட சி.எப்.எல்.யு., படுதோல்வியை சந்தித்தது.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், நிர்வாகத்துடன் தொழிலாளர்களின் சலுகை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொழிற்சங்க அங்கீகார தேர்தல், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். கடந்த நவம்பர் மாதம் நடக்கவிருந்த தேர்தல், சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 10 பணிக்குழு <உறுப்பினர்கள் மற்றும் 2 கான்டீன் மேலாண்மை உறுப்பினர்களுக்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது.இதில் ஐ.என்.டி.யு.சி., மற்றும் டி.எப்.எல்.யு., தொழிற்சங்கங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சி.எப்.எல்.யு., தனித்து போட்டியிட்டது.
பத்து பணிக்குழு உ<றுப்பினர்கள் பதவிக்கு சி.எப்.எல்.யு., சார்பில் செந்தில்குமார், பிலிப் லிசாரியோ, விஜயகுமாரன், ரவி, எம்.ரவி, விஜயகுமார், கோபி, முகமது ஷெரிப், பாலசந்தர், ஜோசப் நிக்சன் ஆகியோரும், இரு கான்டீன் மேலாண்மை உறுப்பினர்கள் பதவிக்கு ஆரோக்கியராஜ் மற்றும் ஆரோக்கியநாதன் போட்டியினர்.
ஐ.என்.டி.யு.சி., சார்பில் அருண்குமார், மணிகண்டன், திலீப்குமார், ப்ரிதிவ் பால், தேவசகாயமும்; டி.எல்.எப்.யு., சார்பில் மகேஸ்வரன், சாந்தகுமார், கோபிநாத், வெங்கடேஸ்ராவ், நடராஜனும்; கான்டீன் மேலாண்மை உ<றுப்பினர்களுக்கு ராஜ்குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஐ.என்.டி.யு.சி., மற்றும் டி.எப்.எல்.யு., கூட்டணிக்கு ஆப்பிள் சின்னமும், சி.எப்.எல்.யு.,க்கு கடிகாரம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
வாக்குபதிவுக்காக தொழிற்சாலை வளாகத்தில் 7 பூத்களும், "கேச்மெண்ட்' பகுதிகளான காட்டேரி மற்றும் கம்பிசோலையில் 2 பூத் என 9 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள ஆயிரத்து 286 ஓட்டுகளில் 95 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.
ஓட்டு எண்ணிக்கை, மாலை 4 மணிக்கு துவங்கி நள்ளிரவு வரை நடந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஐ.என்.டி.யு.சி., மற்றும் டி.எப்.எல்.யு., கூட்டணி போட்டியிட்ட 12 உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்றியது. எதிர்த்து போட்டியில் சி.எப்.எல்.யு., அணி ஒரு பதவியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.
ஐ.என்.டி.யு.சி., மற்றும் டி.எப்.எல்.யு., கூட்டணி வெற்றியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.