ஊட்டி:மின் கம்பத்தில் உரசிய மாடு, மின்சாரம் தாக்கி இறந்தது.
ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் நேற்று காலை, ஒரு மாடு உரசியுள்ளது. அப்போது, மின்சாரம் தாக்கியதில், அதே இடத்தில் மாடு பலியானது.
இதுகுறித்து மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார் கூறுகையில், ""மின் கம்பத்தில், மாடு பலமாக உரசியதால்,மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்றி உரசி, மின் கசிவு ஏற்பட்டுள்ளது; இது தான் மாடு இறக்க காரணம்,'' என்றார்.
காந்தல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி, விபத்து நேரிடும் முன், மின்வாரியத்தினர் சரி செய்ய வேண்டும் என, இப்பகுதியினர் கோரியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.