Advertisement
கல்லூரி மாணவி கடத்தல் சர்ச்சை; போலீஸ் தொடர்ந்து விசாரணை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 பிப்
2013
03:37
பதிவு செய்த நாள்
ஜன 31,2013 18:43

ஊட்டி: ஊட்டியில், கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில், தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவி ஒருவரை, நேற்று முன்தினம் மதியம், சிலர் காரில் கடத்தி செல்ல முயற்சி செய்ததாக கூறப்பட்டது. அப்பெண்ணுக்கு கழுத்தில் லேசான காயமும் ஏற்பட்டது.


இதையடுத்து, ஊட்டி ஜி1 இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட முழுவதம் உள்ள சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு, தப்பி சென்ற வாகனத்தை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால், அந்த வாகனமும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சிக்கவில்லை.


போலீசார் கூறுகையில், ""அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலர், அவரை கேலி செய்துள்ளனர். போலீசில் புகார் செய்வேன், என அப்பெண் கூறியதும், காருக்குள் இருந்தவர்கள் பயந்து போய், அந்த பெண்ணை காருக்குள் இழுக்க முயற்சி செய்துள்ளனர். அதில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தப்பியோடியவர்களை தேடி வருகிறோம்,'' என்றனர்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.