திருப்பூர்: ""மாற்றம் நிறைந்த மனிதர் வாழ்க்கையில், மனிதநேயம் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டும்,'' என்று கலெக்டர் கோவிந்தராஜ் பேசினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா, டவுன் ஹாலில் நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் பூவேந்திரன் வரவேற்றார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, திட்ட இயக்குனர் சம்பத் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பேசுகையில்,""மனிதநேயம் உலகில் மறைந்து போகக்கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயம் மறைந்திருக்கிறது. மாற்றம் நிறைந்த இவ்வுலகத்தில் மனிதநேயம் என்பது எப்போதும் மாறாமல் இருக்க வேண்டும். ஆண்டான் அடிமை என்ற பேதம் பார்க்காமல், மனிதர்கள் மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எண்ணங்கள் தடம் புரண்டால், வாழ்க்கை சக்கரம் வழிமாறி விடும். மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காமல், மனிதநேயத்துடனும், நல்ல எண்ணத்துடனும் வளர வேண்டும்,'' என்றார்.
மனிதநேய வாரவிழா இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கலெக்டர் பரிசளித்தார். பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் ஏழு பேருக்கு 1.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆறாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகள் 230 பேருக்கு தலா 1,000 ரூபாய் வீதம், மொத்தம் 2.30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.