மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே: இது, கருத்து சுதந்திரம் உடைய சமுதாயம். ஒவ்வொருவருக்கும், தங்களின் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. கலைஞர்களுக்கு, கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: கலைஞர்கள் கருத்து சுதந்திரம் பத்தி பேசுற சாக்குல, இந்து தீவிரவாதம் பத்தியும், "வாய்க்கு வந்தபடி பேசுறதுக்கு எனக்கு முழு சுதந்திரம் இருக்கு'ன்னும், உங்க எதிரிகளுக்கு, "கருத்து கந்தசாமி'யா விளக்கம் தர்றீங்களோங்கறது தான், என்னோட, "டவுட்!'
இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால்: சென்னை விமான நிலையத்தை, முழுமையாக தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் தான் இயங்கும். ஒரு சில பணிகளை மட்டும், தனியாரிடம் ஒப்படைக்க உள்ளோம்.
டவுட் தனபாலு: கூடாரத்துல கூட, ஒட்டகம், முதல்ல தலையை மட்டும் தான் நுழைக்கும்... படிப்படியா, முழு உடம்பையும் நுழைச்சு, கூடாரத்தையே காலி பண்ணிடும்... அந்த மாதிரி, சில பணிகளை மட்டும் இப்ப, தனியாருக்கு கொடுத் துட்டு, அப்புறமா, மொத்தத்தையும் தாரை வார்த்துடுவீங்களோங்கறது தான், என்னோட, "டவுட்!'
பத்திரிகை செய்தி: சமையலறையை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளை செய்யும் ஆண்கள், குறைந்த அளவிலேயே உடலுறவில் ஈடுபடுவதாக, அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
டவுட் தனபாலு: நாள் முழுக்க ஓடியாடி, வீட்டு வேலைகளை பார்த்துட்டு, ராத்திரி, படுக்கை அறையிலயும் ஒருத்தரால எப்படிங்க, "சுறுசுறுப்பா' செயல்பட முடியும்...? நம்மூர் பெண்களுக்கு கூட தெரிஞ்ச இந்த எளிய உண்மையை கண்டுபிடிக்க, ஆய்வு எல்லாம் அவசியமாங்கறது தான், என்னோட, "டவுட்!'
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.