Kamal Haasan thanks Jaya, supporters, says received 'huge support' from Muslims | விஸ்வரூபம் பட விவகாரம்: முதல்வருக்கு கமல் ஹாசன் நன்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விஸ்வரூபம் பட விவகாரம்: முதல்வருக்கு கமல் ஹாசன் நன்றி

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (41)
Advertisement
விஸ்வரூபம் பட விவகாரம்: முதல்வருக்கு கமல் ஹாசன் நன்றி

மும்பை: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை உள்ளதாகவும், இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளவதாக நடிகர் கமல் கூறினார். விஸ்வரூபம் திரைபடத்தின் இந்தி பதிப்பு மும்பை உள்ளிட்ட நகரங்களில் நாளை திரைக்கு வருகிறது. இதற்காக நடிகர் கமல் மும்பை சென்றுள்ளார். மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த, நடிகர் கமல் ஹாசன் கூறியதாவது:முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு நான், நன்றி கடன் பட்டுள்ளேன். எனக்கு உதவி செய்ய அவர் கனிவுடன் முன்வந்துள்ளார். இப்போது அவர், எங்களுக்கு உதவி செய்துள்ளார். ஆகவே, நாங்கள் சுப்ரீம் கோர்ட் செல்ல போவதில்லை; அதற்கான தேவையில்லை.இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.


ரசிகர்களுக்கு கமல் உத்தரவு

"விஸ்வரூபம்' படப் பிரச்னையில், " நடந்தது என்ன' என்பது, குறித்து, கமல் ரசிகர்கள் தொகுத்து வெளியிட, விரும்பிய துண்டு பிரசுரங்களுக்கு, கமல் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமைதி காப்பது முக்கியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து,நேற்று முன்தினம் கமல் அளித்த பேட்டி அவரது ரசிகர்களை ஆ@வŒத்திற்குள்ளாகியுள்ளது. கமலுக்கு ஆதரவாக, நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவரது வீட்டில் குவிந்தனர்.அப்போது, பட வெளியீட்டிற்கு ஏற்பட்ட தடைகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும், விளக்கமான துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர்.


இவர்களில் சிலர், நேற்று காலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்திற்கு வந்து, கமலை சந்தித்து அனுமதி கேட்டனர். அப்@பாது, கமல் மும்பை புறப்பட்டு சென்று விட்டதால், அவரது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின் ஒத்துழைப்புடன், படத்தை திரையிடும் முயற்சி துவங்கி விட்டது. இந்நிலையில், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டால், பிரச்னை வேறு வகையில் திரும்பும். எனவே ரசிகர்கள் எவ்வித செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என கமல் உத்தரவிட்டுள்ளதாக, அவரது அலுவலகத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கலைந்துள்ளனர். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
02-பிப்-201300:19:55 IST Report Abuse
திருமகள்கேள்வன் கமலுக்கு சமூக அக்கறை உண்டு... உடல் உறுப்பு தானம், கண் தானம், ரத்த தானம், சொட்டு மருந்து, உயிர் கொல்லி நோய்கள் பற்றிய விழிப்புணர்ச்சி என பலவற்றில் அக்கறையுடன் பங்கெடுத்துள்ளார்.... காவிரி பிரச்சனையில் ஜெயா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது... ரஜினியுடன் சென்று அவரை நேரில் கண்டு உண்ணாநோம்பை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோளினை விடுத்திருக்கிறார்.... என்ன ஒரே வருத்தம் இந்தப்படைப்பாளிக்கு... நம் எல்லோரையும் படைத்த அந்த படைப்பாளி மீது நம்பிக்கை இல்லை... எனவே இந்துக்கள் முஸ்லிம்கள் என வித்தியாசம் பார்க்காமல் அனைத்து மதத்தவரின் மனதையும் புண்படுத்தும் வகையில் ஏதேனும் கருத்துகளை அவருடைய படத்தில் திணித்துவிடுகிறார்... தீவிரவாதம், மதம் போன்றவை கூறிய இரு முனைகளை கொண்ட கத்தி போன்றவை.... அவற்றை லாவகமாகதான் கையாளவேண்டும்... அமெரிக்க குண்டு வெடிப்பு, இங்கிலாந்து ரயில் குண்டுவெடிப்பு, இந்திய பாராளுமன்றம், மும்பை, கோவை, டெல்லி, வாரணாசி என பல்வேறு குண்டுவெடிப்புகளில் யார் ஈடுப்பட்டிருந்தனர் என்பதனை கூறவேண்டிய அவசியம் இல்லை.... இன்றும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருசிலர்தானே தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர்.... சிலர் செய்யும் தவறுக்கு எவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லிமும் பொறுப்பேற்க முடியும்... முடியாது அல்லவா.... காந்தியை கோட்சே என்ற ஒரு இந்து கொன்றதால் ஒட்டுமொத்த இந்துக்களும் காந்தியை கொன்றவர்களாக கருத முடியுமா... இல்லை இதுதான் இந்து மதத்தையே இழிவு படுத்தி விடுமா... தனிப்பட்ட சிலர் செய்யும் தவறுக்கு எவ்வாறு ஒட்டுமொத்த சமுதாயமும் பொறுப்பாகும்.... தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகதான் பார்க்கவேண்டுமே தவிர அவர்களை முஸ்லிம்களாக பார்க்க கூடாது...இது இரண்டு தரபினருக்குமே பொருந்தும்... படத்தில் காட்டப்படுவது தீவிரவாதிகளைத்தானே தவிர முஸ்லிம்களை அல்ல.... உயிர் சங்கீதா அவர்கள் ஒரு பிரமான பழிப்பு படத்தில் நடித்திருந்தார், அதில் வரும் பிராமணர்களை தவறானவர்களாக சித்தரித்திருந்தனர்.... இதனால் உலகில் உள்ள பிராமணர் அனைவரும் களங்கப்பட்டுவிட்டனரா... அவர்களின் புனிதம்தான் இந்த படத்தினால் கெட்டுவிட்டதா...பிராமணர்களின் மதிப்பு, அந்தஸ்து இன்றும் உயர்ந்துகொண்டுதானே வருகிறது... குறையவில்லையே ...படம் என்பது வெறும் நிழல்தான் நிஜம் அல்ல...
Rate this:
Share this comment
Cancel
VIDHURAN - VILLUPPURAM,இந்தியா
01-பிப்-201319:14:23 IST Report Abuse
VIDHURAN விதுர நீதியை முத்தரப்பினருமே கற்க வேண்டும். ஒரு அரசனின் நாட்டில் வாழ்பவன் அந்த அரசனை ப்ரீதி செய்யாமல், எதிர்த்து காரியம் செய்து தான் வாழ்க்கையை நடத்த முடியாது. இது விதுர நீதியில் ஒன்று. அது தான் கமலுக்கு ஏற்பட்ட அனுபவமும், நஷ்ட்டமும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும். அடுத்தவரை துன்பத்தில் ஆழ்த்த எண்ணி காரியம் செய்பவரை ஆண்டவன் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். இது முத்தரப்பினர்க்கும் பொதுவான வாக்கியங்கள். கமல் ஒன்றை மறந்துவிட்டார். Distributors 13 பேர் DTH இல் பட release date விவகாரத்தில் கோர்ட்டுக்கு போனார்கள். அப்போது கமல் என்ன விளக்கம் கொடுத்திருந்தார்? இந்த 13 பேரும் கோர்ட்டுக்கு போகாமல் தன்னை நேரில் சந்தித்து பேசி சுமுகமாக தீர்த்திருக்கலாம் என்று பேட்டி அளித்திருந்தார். தற்போது அரசியும் கமல் தன்னிடம் வராமல் ஏன் கோர்ட்டுக்கு போனார் என்று கேட்கிறார்? கமல் கேட்ட அதே கேள்வி. பிறர்க்கொரு நீதி தனக்கொரு நீதியா? இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். கமல் விஷயத்தில் உடனடியாக காட்டிவிட்டது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். தெய்வம் மனுஷ்ய ரூபேண. மனித ரூபத்தில் தான் அரசனும் உள்ளான். எப்போதுமே ஆள்பவன் ஆண்டவனுக்கு சமம். ஆள்பவனை மதிக்காமல் பகைத்துக்கொள்வது என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பது விதுர நீதி. அவன் தர்ம நியாயத்திற்கு புறம்பாக செயல்படும்போது அதற்குரிய தண்டனைகள் அவனுக்கு காத்துக்கொண்டிருக்கும். முத்தரப்பினரும் விதுர நீதியை படித்துப்பாருங்கள். நமது பள்ளி பாட திட்டத்திலேயே விதுர நீதியை போதிக்கலாம் என்பதை உணர்வீர்கள். இனியாவது கடவுளை, அனைத்திற்கும் அப்பாற்ப்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பதை கமல் உள்பட எல்லோரும் நம்புவார்களா? கடவுள் என்பது :- ஒருவர்க்கு அல்லா, ஒருவர்க்கு ஏசுபிரான், ஒருவர்க்கு விஷ்ணு, ஒருவர்க்கு சிவன், ஒருவர்க்கு சத்தியமும், உழைப்பும், தர்மமுமே கடவுள். ஆகா அனைத்துமே அந்த ஒரு சக்தியின் பல்வேறு வடிவங்களே.ஆதலால் ஒருவர் நம்பிக்கையை மற்றொருவர் புண்படுத்தலாகாது. எல்லோருக்கும் ஆண்டவன் மன சாந்தியையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன். முத்தரப்பினரும் எல்லோருக்கும் மன சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் அள்ளி வழங்குமாறு நடந்துகொள்ள வேண்டுகிறேன். நாம் வாழப்போவது எவ்வளவு காலம்? இதற்குள் ஏன் ஒருவர்க்கொருவர் பகைமை பாராட்ட வேண்டும்? எல்லோரும் நிம்மதியாக வாழலாமே.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
01-பிப்-201317:34:01 IST Report Abuse
venkat Iyer இதனை முன்பே அம்மாவை மரியாதைக்காக பார்த்து இருக்கலாம் அல்லவா?.உமக்கு ஏன் தாத்தாவிடம் சேர்த்து வம்பு தும்பு.அவருக்கு,கடவுள் இல்ல என்று சொல்லுவாரு. அரசியல் பண்ணுவாறு.நீங்கள் கலைஞன் அப்பா
Rate this:
Share this comment
Cancel
davis - bangalore,இந்தியா
01-பிப்-201315:51:13 IST Report Abuse
davis கமல் தனி கட்சி தொடங்கி விடுவரோ என்கிற பயம் அம்மாவுக்கு,அதுதுதன் இன்தா சுமுக தீர்வு?
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
01-பிப்-201315:21:51 IST Report Abuse
muthu Rajendran ரஜினி ,கமல் எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் நல்லுறவு வைத்துகொள்ள விரும்பும் கலைஞர்கள் . அவர்களை வெறும் கலைஞர்களாக இருக்க அனுமதியுங்கள் .பொதுவாக இருவருமே தங்கள் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்தாமல் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறது என்பது பாராட்ட வேண்டிய ஒன்று. சான்றாக உடல் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட கமல் தான் காரணம். இந்த நல்ல கலைஞர்களை அரவணைத்து காப்பது நம் எல்லோரின் கடமையே
Rate this:
Share this comment
Baarathaputran - Chennai,இந்தியா
01-பிப்-201316:59:24 IST Report Abuse
Baarathaputranஇப்போது அவர், எங்களுக்கு உதவி செய்துள்ளார். ஆகவே, நாங்கள் சுப்ரீம் கோர்ட் செல்ல போவதில்லை அதற்கான தேவையில்லை- அறிக்கையில் உள்ள 'இப்போது' என்கிற சொல்லை கவனியுங்கள் கொஞ்சம் வில்லங்கமாக தெரிகிறது இதற்கு முன் உதவி செய்யவில்லை என்பது போல படுகிறதே இனியாவது கவனமாக இருப்பார் என்று பார்த்தால், உலக நாயகன் உளறல் நாயகனாக இருக்கிறாரே? ...
Rate this:
Share this comment
Cancel
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
01-பிப்-201314:53:25 IST Report Abuse
Chandra Sekaran படம் திரைஇடப்பட்டு பிரச்சினை ஏற்பட்டிருந்தால் சட்டமொழுங்கு இந்த ஆட்ச்சியில் சரிஇல்லை என்று தலைவர் கூறியிருப்பார் ஜெ நடந்துகொண்டது பாராட்டவேண்டியது டப்பட்டு
Rate this:
Share this comment
Cancel
Sudhir - Bangalore,இந்தியா
01-பிப்-201314:44:51 IST Report Abuse
Sudhir விஸ்வரூபம் படம் பார்த்தாச்சு பெங்களூர், இன்னோவடிவ் முல்டிப்லெக்ஷில் டிக்கெட் ப்ளாக்கிலும் கிடைகிறது. படம் பார்த்தபிறகும் இப்படத்தில் பிரச்னை எங்கே இருக்கிறது என்று லென்ஸ் வைத்து தேடிபர்த்தும் கிடைக்கவில்லை. ஒன்றாவது கிடைக்குமா என்று பார்த்தேன் இல்லவே இல்ல ஐயா. கற்றோருக்குகும் பாமரனுக்கும் புரியும்படியே உள்ளது எல்லா கட்சிகளும். இதில் எதிர்ப்பவர்கள் யாவரும் al-queida, taliban, பாகிஸ்தான் தீவிரவாதிகளை அதறிப்பவர்களோ என்கின்ற அச்சமே ஏற்படுகிறது. படத்தில் இந்திய இஸ்லாமியர்களையோ அல்லது பொதுவனோ இஸ்லாமியர்களையோ எந்த விதத்திலும் புண் paduthum வகையிலான கட்சிகள் இல்லை. பலத்தின் நாயகனே ஒரு இஸ்லாமியர். நல்ல படம் தந்தர்க்ககவும், ஹாலிவுட் தரத்தில் படம் தந்ததற்கும் கமல் அவர்களை வாழ்த்தவேண்டும். ஆப்கானிஸ்தானில் மனிதர்களின் அவல நிலையை, ஒரு விவசாயி கூட ஒபியம் வளர்த்து வாழ வேண்டியகட்டயத்தை துகிலுரித்து கட்டியதற்காக கமல் அவர்களை அணைத்து உண்மையான இஸ்லாமியர்கள் யாவரும் அவரை வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Ashwin Kumar - Chennai,இந்தியா
01-பிப்-201313:22:02 IST Report Abuse
Ashwin Kumar நேற்றைய பிரஸ் மீட் தெளிவாக இருந்தது ஆனால் நான் கேட்க வருவது என்னவென்றால் நாளை வேறு படத்திற்கு இது போன்ற பிரச்சனை வந்தால் இதே போன்ற நடவடிக்கை எடுக்க அம்மா தயாரா ?
Rate this:
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
01-பிப்-201311:15:20 IST Report Abuse
SHivA வேறு வழி??
Rate this:
Share this comment
Cancel
sathish - salem  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-201310:30:22 IST Report Abuse
sathish cm is 100% correct dissution to viswarupam because peaceful life is important in every one.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை