சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். காவிரி, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி சட்டசபையிலிருந்து தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, திங்கள் முதல் வெள்ளி வரை, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, எம்.எல்.ஏ.,க்கள், கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர். கவர்னர் உரையில், இடம்பெற வேண்டிய விவரங்கள் குறித்து, சில தினங்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் விவாதித்தனர். குறிப்பாக, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, தற்போது வழங்கப்பட வேண்டிய, நிவாரணம் குறித்த விவரங்கள், கவர்னர் உரையில் இடம் பெறும் என கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.