Pancharathana keerthanai at tiruvayaru | 1,000 கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை திருவையாறில் பிரமாண்ட இசை விருந்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,000 கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை திருவையாறில் பிரமாண்ட இசை விருந்து

Added : ஜன 31, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
1,000 கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை திருவையாறில் பிரமாண்ட இசை விருந்து

தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜர் சுவாமி, 166வது ஆராதனை விழாவில், ஒரே நேரத்தில், 1,000 கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்று, பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து, இசை விருந்து படைத்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தப்படும். கடந்த, ஐந்து நாட்களாக நடந்த ஆராதனை விழா, நேற்று நிறைவடைந்தது. திருவாரூரில், ராமபிரம்மம், சீதம்மா தம்பதிக்கு, 1767 மே, 4ம் தேதி, தியாகராஜர் சுவாமி பிறந்தார். எட்டு வயதிலேயே இசைஞானம் பெற்று, இசைஞானியாக திகழ்ந்தார். ராமபக்தராக
விளங்கினார்; சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படுகிறார். இவர், தெலுங்கு மொழியில் எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றினார். இதில், பஞ்சரத்ன கீர்த்தனை புகழ்பெற்றது. இறுதியாக, 1847 ஜன., 6ம் தேதி, தை மாதம் பகுள பஞ்சமி திதியில், தியாகராஜர் சுவாமி, திருவையாறில் முக்தி அடைந்தார். முக்தி தினமான நேற்று, காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, பிரதான நிகழ்ச்சியில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை, 1,000த்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள், பாடகர்கள் ஒரே நேரத்தில் இசைத்தனர். ஆராதனை விழாவில், தனித்தனியாக பிரபல சினிமா பாடகர்கள் ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், சீர்காழி சிவசிதம்பரம், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் ஆகியோர், பாடல்களை பாடி பரவசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனையில், முன்வரிசையில் சிவ சிதம்பரம், சுதா ரகுநாதன் மற்றும் கலைஞர்கள் மகதி, அருண், சுமா சுசித்ரா, கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, ப்ரியா சகோதரிகள் பாடினர். முன்னதாக, காலை, 7:00 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, அவரது சமாதியில் எழுப்பப்பட்ட சிலையை வந்தடைந்து தீபாராதனை, பூஜை, வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, இரவில் ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhuran - Hastinapur,இந்தியா
01-பிப்-201312:44:40 IST Report Abuse
vidhuran நேற்று இந்த நிகழ்ச்சியை டிவி -யில் பார்த்தேன். அனைத்து கலைஞர்களும் ஒன்றாக அமர்ந்து, தான் பெரியவர், சிறியவர் என்பதை எல்லாம் மறந்து St.தியாகையாவின் பாடல்களை ஒன்று சேர்ந்து பாடியதை பார்த்ததும், கேட்டதும் manadhukku ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆராதனை விழாவினை தொடர்ந்து நடத்த உறுதுணையாக இருந்து வரும் உறவு முறைகளுக்கும், கமிட்டிக்கும், வாசன் மூப்பனார் குடும்பத்திற்கும், eco இல்லாமல் பக்திச் சிரத்தையுடன் கலந்து கொண்ட எண்ணற்ற கர்நாடிக் சாஷ்த்ரீய சங்கீத வித்வான்களுக்கும் நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
01-பிப்-201311:28:07 IST Report Abuse
MSG அவ்ளோதான்..இனி அடுத்த வருஷம் தியாகராஜா சுவாமி ஐ பாக்கலாம். அவரு நீங்க பாடும்போது திருவையாரிலேயே இல்லேன்னு கேள்விப்பட்டேன்.. போய் லட்ச லட்சமாய் சம்பாதிக்கிற வழியப்பாருங்க.
Rate this:
Share this comment
N.Kannan - Chennai,இந்தியா
01-பிப்-201321:21:48 IST Report Abuse
N.KannanThis is incorrect. A trained Carnatic musician has to sp around 7 to 8 years in learning the songs with lot of memorizing, imaginative alapanas and swarams and many more and they sing them without referring to books in the stage. After many years of stage concerts and earning names only a Carnatic musician gets just more than 20K including percussions and other accompaniments. Whereas those who are singing cine songs, in some cases with karaoke, get more than 40K for a program in a marriage. Carnatic music is an art with lot of grammer in it and the musicians are worth their remuneration....
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
01-பிப்-201310:04:20 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM வருடா..........வருடம் .........நடக்கும்......இந்த உற்சவம் .......உற்சாகமாக இருபதுடன் ......அவர்கள் இசையில் .....மகிழ்சியுரும் ......இசை பிரியர்களுக்கும் ........இந்த வரமானது ......வரப்ரசாதமாக....தெரிகிறது.......மேலும் ...இதன் ஏற்பாடுகளை சையும் அதன் நிர்வாகமும் ......காவல் துறையும் .....மாவட்ட ஆசியருக்கும் ....நன்றி சொல்ல வேண்டும் ...அவர் ...அவர்கள் .......திறமையை ....மிகவும் ........அற்புதமாக .....பாடி ......அனைவரையும் ....இசை ..என்னும் .....இன்பத்தில் ......இறைவனோடு ........கலந்து .....அந்த ஆனந்தத்தை ......கொடுத்த ....அணைத்து இசை கலங்கைகருக்கும்.......நன்றி சொல்ல ......வார்த்தைகளே ........இல்லை .........
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-பிப்-201306:10:47 IST Report Abuse
Lion Drsekar தியாகராஜா ஸ்வாமிகள் சரபோஜி மன்னரின் அழைப்பை ஏற்க்க மறுத்து ராம நாமமே நிரந்திரம் என்று பாடிக்கொண்டே இருந்தார், பணம், பொருள், அனைத்தும் வேண்டாம் என்று வாழ்ந்தார், இன்றைக்கு அவருடைய பாடல்களைப் பாடி பல கோடி சம்பாதிக்கும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி அவருக்கு நன்றி தெரிவிக்கக் கூடும் ஒரு நிகழ்ச்சி வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
01-பிப்-201314:00:14 IST Report Abuse
Narendra Bharathiஉண்மையான கருத்து, ஐயா. அந்த சம்பாத்தியத்தில் ஒரு கடுகளவேனும் சமுதாய நலனுக்கு (charity) செலவிடுபவர்கள் இன்று யாரும் இல்லையே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை