speak with Muslim organizers ': CM advise to kamal on visvarupam' to be released | முஸ்லிம் அமைப்பினரோடு உடன்பாடு ஏற்படுத்துங்கள்: கமலுக்கு முதல்வர் யோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம் அமைப்பினரோடு உடன்பாடு ஏற்படுத்துங்கள்: கமலுக்கு முதல்வர் யோசனை

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (107)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 முஸ்லிம் அமைப்பினரோடு  உடன்பாடு ஏற்படுத்துங்கள்:  கமலுக்கு முதல்வர் யோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே, "விஸ்பரூபம்' திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அமைப்பினரை அழைத்து பேசி, பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு, கமல் அணுகினால், படத்தைத் திரையிட அரசு தகுந்த உதவியளிக்கும்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
"விஸ்வரூபம்' படம் வெளியிடப்படும் நாள் அறிவிக்கப்பட்டவுடன், 24 முஸ்லிம் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்து, படத்தை தடை செய்ய, தமிழக உள்துறை செயலரிடம் மனு கொடுத்தார்கள். அந்த அமைப்புகளின், தீவிர போராட்டத்திற்குப் பின்னரே, படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பே, அரசுக்கு முக்கியம். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கைக் காக்கவே, படத்திற்கு அரசு தடை விதித்தது.ஆனால், ஜெயா, "டிவி'யில் ஒளிபரப்ப, உரிமை அளிக்காததால் தான், அப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது என, அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், தவறான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. எனக்கும், ஜெயா, "டிவி'க்கும் எந்த தொடர்பும் இல்லை.
கடந்த, 1955ல் கொண்டு வரப்பட்ட, தமிழ்நாடு சினிமா கட்டுப்பாட்டு சட்டம், பிரிவு, 7ன் படி, சர்ச்சைக்குரிய படத்தை, தடை செய்வதற்கு, மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 144ன் கீழ்தான், மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.கமலை பழிவாங்க நினைத்திருந்தால், தமிழ்நாடு சினிமா கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், படம் தடை செய்யப்பட்டிருக்கும். கமல் மீது, அரசுக்கோ, எனக்கோ எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. இப்படம், தமிழகத்தில் மட்டும், 524 தியேட்டர்களில் திரையிடப்படுவதாகக் கூறப்பட்டது. அனைத்து தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க, போதிய போலீசார் இல்லை. படம் திரையிடப்பட்ட பின், வன்முறை ஏற்பட்டு, அதைத் தடுக்க முயல்வதை விட, முன்கூட்டியே வன்முறையைத் தடுக்க, 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. படம் வெளியிடுவதற்கான தேதியை அறிவிப்பதற்கு முன், இஸ்லாமிய அமைப்பினரை அழைத்துக் காட்டி, தேவையற்ற காட்சிகளை நீக்கியிருந்தால், இப்பிரச்னை நீடித்திருக்காது.ஆனால், அவ்வாறு செய்யாமல், படம், 25ம் தேதி வெளியாக இருந்த நிலையில், 21ம் தேதிதான் கமல், அவர்களை அழைத்துக் காட்டினார். அவர்கள் நீக்கச்சொன்ன காட்சிகளை நீக்காமல், கமல் பிடிவாதமாக இருந்ததால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் படத்திற்காக தனது சொத்து முழுவதையும் இழந்ததற்கு, அரசை, கமல் குறை கூறுவது சரியல்ல. தன்னால் எவ்வளவு கடனை சமாளிக்க முடியும் என்பது கமலுக்குத் தெரியாதா?
அவர், அமெரிக்காவில் இருக்கும்போது, என்னை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, எவ்வாறு நேரம் ஒதுக்க முடியும்?தடை அறிவித்த, 15 நாள் அவகாசத்தை, கமல் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார். இந்தப் பிரச்னையில், எம்.ஜி.ஆருக்கு கமல் குறித்து, நான் ஒரு கடிதம், எழுதியதாகவும், அதில் கமல் எம்.ஜி.ஆரைப் புறக்கணிப்பதாக குறிப்பிட்டிருப்பதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.அப்போது, நான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தேன். நானும், முதல்வர் எம்.ஜி.ஆரும் தினமும் சந்தித்து, கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் பிரச்னை குறித்தும், மனுக்கள் குறித்தும் பேசியிருக்கிறோம். மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டு இருக்கிறோம். அவ்வாறு இருக்கும்போது நான் ஏன் கடிதம் எழுத வேண்டும்?
கமல் மீது தனிப்பட்ட காரணத்தால் தான், தடை விதிக்கப்பட்டிருக்கிறது எனில், கருணாநிதியின் குடும்பத்தினர் திரைப்படம் எடுத்து சுதந்திரமாக வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள். எனவே, கமலின் படத்திற்கு, மக்களின் நலன் கருதிதான் தடை விதிக்கப்பட்டது.முன்பு ஒரு விழாவில், "வேட்டி அணிந்தவர் பிரதமராக வரவேண்டும்' என்று கமல் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.கமல், முஸ்லிம் அமைப்பினரை அழைத்து, கலந்து பேசி, உடன்பாடு ஏற்படுத்தி, பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு, அரசை அணுகினால், படத்தைத் திரையிட, அரசு தகுந்த உதவியளிக்கும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A JEYARAJ - Tallahassee,இந்தியா
07-பிப்-201304:39:58 IST Report Abuse
A JEYARAJ ஒரு தியேட்டருக்கு ரெண்டு போலிச போட வழியில்ல. இதுல பேத்தல் அறிக்கை பிள்ளைய கில்லி விட்டு தொட்டில ஆட்டுறது. இதுக்கு பாராட்டு நன்றி வேற. வடிவேலு பாணியில சொன்னா " நல்ல நடத்துறாங்க கூத்து இதுக்கு கமல் தான் கிடைத்தாரா? சிவாஜிக்கு பின்னர் நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகரை தமிழகம் இழந்து விட வேண்டாம்,, கமல் மற்றவர்களை போன்று அல்ல .. தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் தான் முதலீடு செய்கின்றார். ஒரு" நடிகை நாடகம் பார்க் ( நடத்து) கிறாள் ", அவரை நோகடித்து நூலாக்கிவிடாதீர்கள் ,,தமிழா டாஸ்மார்க்கில் தவழும் தமிழா , இலவசங்களால் சிந்திக்க மறந்துவிட்டாயே
Rate this:
Share this comment
Cancel
A JEYARAJ - Tallahassee,இந்தியா
07-பிப்-201304:09:32 IST Report Abuse
A JEYARAJ நாற்பதையும் கைப்பற்றி நாடாளலாம் என ( முன்னாள் நடிகை ) இந்நாள் முதல்வர் கனவுகாணும் வேளையில் ப சி புத்தகத்தை முக வெளியிட அதில் கலந்து கொண்டு தமிழன் அதுவும் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என கமல் தனது அவாவை எதார்த்தமாக சொல்ல,, வந்த வினை தான் தடை,,,, நடு இரவில் படிஏறி,,மீண்டும் தடை எல்லாம் .,மக்கள் முட்டாள்கள் அல்ல .. ஜெயாவின் நாடகத்தை புரிந்து கொள்ளாமல் இருக்க ,,முஸ்லிம் தீவிரவாதம் உலகெங்கும் பரவிகிடக்கின்றதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது கசாப் கதை, பின்லேடன் கதை, அல்குவைதா, லச்கரிதொய்பா இப்படி மும்பை,,நாடாளுமன்ற தாக்குதல்,,காஷ்மீர் கதை எல்லாம் நாடறிந்த உண்மை ,, மணி ரத்தினம் இப்படி உண்மை சம்பவங்களை கதைப்படுத்தி பம்பாய் ,, ரோஜா ,இருவர் (ஜெயாவின் வில்லி கேரக்ட்டர் ) படங்களை வெளியிட்டார் ,, மக்கள் பார்த்து ரசித்தனர் .. மாறாக யாரும் ,குறிப்பாக முஸ்லிம்கள் யாரும் ஆட்சேபனையோ கலவரமோ செய்யவில்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். பிடித்தால் ரசிக்கலாம். இல்லையெனில் சரியாக இல்லை என யாரும் விமர்சிக்கலாம் ,, அதை விடுத்து கமலுக்கு ஒரு செக் வைத்த ஜெயாவின் நாடகம்தான் சட்டம் (ரொம்ப) ஒழுங்கு தடை இவை எல்லாம், கஞ்சி குடிக்கும் போது உள்ள நட்பினை பயன்படுத்தி தூண்டிவிட செய்து ,அரசியலாக்கி தடை போட்டு, கமலுக்கு செக்,முஸ்லிம் நண்பி என ஒரு கல்லில் இரு( முக & ப சி ) தேங்காய் உடைத்துள்ளார் ,, இது கை தேர்ந்த நடிகையின் நாடகமாக தெரிகின்றது ,, அது சரி கவர்னர் தீவிரவாதிகளுடன் கை கோர்ப்பது, மத்திய மந்திரி பிரதமரை கொன்று பிரதமர் ஆக்குவது , MLA ரவ்டிகளுடன் கை கோர்த்து மந்திரி ஆக்க முயல்வது ,, போலிசு கமிசினர் கொள்ளை கூட்டம் ,,ரவ்டியுடன் தொடர்பு ,காவல்துறை கடைசியில் வருவதாக கிண்டல், மருத்துவர் வக்கீல் , வாத்யார் பணிகளில் கிண்டல் அரசு அலுவலர்கள் ஊழல் லஞ்சம் போன்று சித்தரித்து படங்கள் வருகின்றதே, சம்பந்தப்பட்ட நபர்கள் ஆட்சேபனை தெரிவித்தால் அரசு தடை போடுமா ? ஒரு படம் கூட வெளியிடமுடியாது ,, சினிமாவை அரசியலாக்கி வோட்டு வங்கியை உருவாக்கும் திட்டத்தின் வெளிப்பாடுதான் ,, அது சரி ஜெயா TV க்கு சம்மந்தம் இல்லை கமல் பற்றி MGR க்கு கடிதம் எழுதவில்லை, தமிழன் காதில் பூ ,, MGR மீது செயல்பட முடியாத முதல்வர் என புகார் கடிதம் ஜெய எழுதியாவர்தானே மறுக்க முடியுமா ? அப்படி மறுத்தால் பிரதமர் அலுவலக கோப்புகளில் உள்ள கடிதம் மத்திய மந்திரிகளால் ( அரசினால்) அம்பலப்படுத்தப்படுமே? மறுப்பாரா ஜெயா? எனவே தடை நோக்கம் எது என்பது கையில் உள்ள வெண்ணை போன்றது ,, தமிழன் வீணாக நெய் தேடி அலைய வேண்டாம் ,
Rate this:
Share this comment
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
01-பிப்-201320:36:06 IST Report Abuse
navasathishkumar அம்மாவிற்கு திரை பட சட்ட நுணுக்கம் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சரை விட தெரிந்திருக்கும் என்றபோது நமக்கு வியப்பாக இருக்கின்றது finger point இல் இந்த தகவல்களை வைத்திருக்கும் அம்மா கூடங்குளத்தில் தனது திறமையை காட்டி உடன் மின்சாரம் வழங்க வேண்டும் , நாங்கள் தமிழகத்தில் வாழ்வதே ரிஸ்க் மின்சாரம் இல்லாமல் பல முதலாளிகள் புலம்பி கொண்டிருகின்றார்கள் அவர்களுக்கு இங்கே வாழ்வது தேவை இல்லை , என்று அட்வைஸ் செயாமல் சூரிய சக்தி மின்சாரம் 80 சதவீதம் மானிய விலையில் 10 வருட கடனாக வழங்க அம்மா முடிவு செய்தால் தமிழகம் செழிக்கும் , நாங்களும் கமல் போல தான் வாழ்ந்து கொண்டிருகின்றோம் வயதுக்கு ஏற்ற வருமானம் இல்லாமல் , அம்மா எங்களை காக்க pension தரவேண்டாம் தடை இல்லா மின்சாரம் , மக்களின் சுமையை குறைக்கும் பஸ் கட்டண உயர்வு , மத்தியில் போடப்படும் சேவை வரி /vat வரி இவற்றை குறைப்பது குறித்து முடிவெடுத்தால் எங்களின் வாழ்க்கை தரம் உயரும் .ma
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
01-பிப்-201320:35:54 IST Report Abuse
P. Kannan மக்கள் போலீஸை கண்டால் பயப்படுவார்கள், போலீஸுக்கு அரசியல் வாதியை கண்டால் பயம், அரசியல் வாதிக்கு நீதி மன்றத்திற்கு போக பயம். கருணாநிதி தைரியமாக வழக்கு போடு பார்க்கலாம் என்று கூறுகிறார். நீதி மன்றம் முன்புபோல் அல்ல, ஹரியானாவின் முன்னால் முதல்வர் கதியை பார்த்திர்களா ? தலைவா
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
01-பிப்-201320:09:19 IST Report Abuse
Raja Singh சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டான இஸ்லாமிய சகோதரர்களே , இந்திய சுதந்திரம் பெற்றதும், அந்நிய நாட்டவர்கள் நமது ஒற்றுமையின் மேல் பொறாமை கொண்டனர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு தகுந்த நமது இயற்கைவளம், மனிதவளம்,மனிதநேயம் இப்படி அனைத்தும் நம்மிடம் உண்டு. சுதந்திரம் பெறும் முன்பு வரை, ஆனால் அந்நியர்கள் விதைத்த மதம் மற்றும் ஜாதி என்னும் விதையால் {பிரிவினையால்} நாம் நம் நிலை உணராது இருப்பதால் இன்றுவரை அரசியல்வாதிகளும் இந்த அந்நியனின் விதைக்கு உரமிட்டு மரமாய் வளர்த்து அவர்கள் சுகபோகமாய் வாழ்கிறார்கள். எண்ணற்ற கலவரங்களில் யார் பாதிப்பு அடைகிறார்கள், சாமானியன் நாம் தான். ஆகையால் ஒரு கலைஞனுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டாம். ஒரு தடைகல் ஆக இல்லாமல் இருப்போம். நாம் ஒன்று பட்டால் வல்லரசாக உலகில் முதல்நிலையில் இருப்போம் முடியும். ஆகையால் நாம் சிந்தித்து செயல்படுவோம். ஒன்றே நமது குலம் { மனித குலம் } ஒன்றே நமது தெய்வம் ...
Rate this:
Share this comment
Cancel
baskaran - madurai,இந்தியா
01-பிப்-201319:20:25 IST Report Abuse
baskaran ஒரு சில அரசியல்வாதிகள் விஸ்வரூபம் படத்தை டேம் 999 உடன் ஒப்பிட்டு அதனால் தடை விதிக்கலாம் என்று சொல்கின்றனர். அனால் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவில்லை. டேம் 999 படம் பலமாக இருக்கும் ஒரு அணையை உடைந்துவிடும் என்றும் அதனால் மக்கள் பலர் இறப்பதாகவும் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் முல்லைபெரியார் டேம் நன்றாக உள்ளது.ஆனால் இன்னும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் படத்தில் உள்ள அனைத்தும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஒரு இடத்தில நடப்பதை எடுத்துகட்டினால் அதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். மேலும் அதை நடக்காமல் முடிந்தவரை தடுக்க வேண்டும். ஆனால் இது எங்களை காயப்படுத்துகிறது என்று சொல்லி உண்மையை மறைக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
01-பிப்-201317:06:16 IST Report Abuse
venkat Iyer கமல் கருணாநதி தனது அம்பதாவது கலையுக விழாவிற்கு வ்ந்துவிட்டதால் கரு பேச்ச கேட்கிறார். அது ஆபத்துலதான் முடியுது.ஆட்சியில,உள்ளவர்களுக்கு மரியாதைக்காவது கூப்பிடனும்/சொல்லனும்/கேட்கனும்.அதற்கு தலவா நீங்கதான் சரி.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
01-பிப்-201316:35:18 IST Report Abuse
Vaduvooraan ஒரு சினிமாவுக்கு தடை என்றதும் எப்படி பொங்கி எழுந்து போராட்டத்துக்கு தயாராகிறோம்? எப்போதும் இல்லாத அளவு பேச்சுரிமை, கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் இவை எல்லாம் நினைவுக்கு வந்து பாடாய் படுத்துகின்றன. இந்த மாதிரி உணர்ச்சி வசப் பட்டு தன தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது நமது பிறவிக் குணம். வெளிநாட்டில் இருக்கும் ஒரு அறிவுக் கொழுந்து அதற்குள் ஒரு இணைய தளம் வாயிலாக கமலுக்கு இந்த தடையினால் ஏற்படக் கூடிய நஷ்டத்துக்கு ஈடு செய்ய நிதி திரட்ட துவங்கி இருக்கிறாராம் இது எப்படி இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
01-பிப்-201314:58:44 IST Report Abuse
யமதர்மன் அடுத்து மு க வின் அறிக்கை என்ன? - இனம் இனத்தோடு சேர்ந்து விட்டது. .....இந்த ஒற்றுமை உணர்வு திராவிடனுக்கு இறந்திருந்தால், நம் கட்சி தோற்று போயிருக்காது, அதனால்தான் முன்பே சொன்னேன், திராவிடர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று. நான் ஒரு தீர்க்க தரிசி என்பதை ஐ நா சபையே ஒத்துக்கொண்டு விட்டதாக என் மகன் ஸ்டாலின் சொன்னார்......
Rate this:
Share this comment
Cancel
ganapathy - chennai,இந்தியா
01-பிப்-201314:54:46 IST Report Abuse
ganapathy இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்ல .அடுத்தவங்க விசயத்தல தன் தலை இடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை