கவர்னர் உரையுடன், இன்று துவங்கவுள்ள சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க, எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.கடந்தாண்டு சட்டசபையில், அநாகரிகமாக நடந்துக் கொண்டதாக கூறி, எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதன்பிறகு, சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை, விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் ஏதாவது ஒருநாளில், அங்கு சென்று, கையெழுத்து போடுவதை, அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இருப்பினும், கடந்தாண்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த சட்டசபை வைரவிழாவில், விஜயகாந்த் பங்கேற்றார்.இந்தாண்டுக்கான, முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. இதில், பங்கேற்பதா அல்லது மின்வெட்டு, அவதூறு வழக்குகளை கண்டித்து புறக்கணிப்பதா என்பது குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகளுடன், நேற்று முன்தினம், விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.முடிவில், கவர்னர் உரையில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், சட்டசபைக்கு செல்வது குறித்து எந்த முடிவையும், விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்கவில்லை.ஆலோசனை கூட்டம் முடிந்ததும், தனது மனைவி மற்றும் மகன்களுடன், விஜயகாந்த் திருப்பதி புறப்பட்டு சென்றார்.நேற்று, தனது திருமண நாள் என்பதால், குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிற்பகலுக்கு பிறகு, விஜயகாந்த் வீடு திரும்பினார்.நேற்று முன்தினம் வரை, சட்டசபைக்கு செல்லலாமா என்ற குழப்பத்தில் இருந்த விஜயகாந்த், திருப்பதி சென்றுவந்தபிறகு, சட்டசபைக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.நான்கு எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படும் நிலையில், மீதமுள்ள, 24 எம்.எல்.ஏ.,க்களுடன் சென்று, கவர்னர் உரையில் பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இன்று பிற்பகலுக்கு பிறகு, சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
arumai தலைவர ... அத்த கட்ட நடவடிக்களை கவனிஉங்கல். சட்டசபைக்கு தினமும் செல்லுங்கள். மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுங்கள்.. மக்களுக்காக பேசுங்கள். சட்டசபையை புரகநிகதிர்கள்.. மக்கள் நமக்கு கொடுத்த நல்ல வைப்பு.. நம்.. அ.தி.மு.க. விற்கு கொடுத்த வாய்ப்பு... கலங்கள் மாறும்...நம் அம்மா vum கோட்டைஇல் கோடி ஏறும் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.