Ready to meet the case: Karunanidhi | வழக்கை சந்திக்கத் தயார் முதல்வருக்கு கருணாநிதி பதில் | Dinamalar
Advertisement
வழக்கை சந்திக்கத் தயார் முதல்வருக்கு கருணாநிதி பதில்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "முதல்வர் என் மீது வழக்கு போடும் போது, கோர்ட்டில் ஆதாரத்தைக் காட்ட, நான் தயாராக இருக்கிறேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை :கமல் நடித்த, "விக்ரம்' திரைப்படத்தின், சிறப்புக் காட்சி ஒன்றில், முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., கலந்து கொண்ட போது, ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில், கமலை பற்றி ஒருமையில் கண்டனம் செய்து குறிப்பிட்டுத் தெரிவித்த, சில வாசகங்களை எழுதியிருந்தேன்.அப்படி நான் எழுதியது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், தான் தினமும், எம்.ஜி.ஆருடன் பேசுவதற்கான வாய்ப்பு அப்போது இருந்ததால், எதற்காக, கடிதம் எழுத வேண்டும் என்றும், அதற்காக, என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.நான் எழுதியதற்கு போதுமான ஆதாரம், என்னிடம் இருக்கிறது. முதல்வர், என் மீது வழக்கு போடும் போது, கோர்ட்டில் ஆதாரத்தைக் காட்ட, நான் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (130)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
06-பிப்-201314:44:55 IST Report Abuse
MOHAMED GANI அவதூறு வழக்கு போடுவேன் என்று சொல்வதோடு சரி அதன்பின் எதுவும் இருக்காது. ஏற்கனவே போட்ட அவதூறு வழக்குகளின் கதிதான் எல்லோருக்கும் தெரியுமே. பத்திரிகையாளர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என்று எல்லோரும் வழக்கு, மிரட்டல் என்று அஸ்திரங்களைப் பயன்படுத்தி பணியவைக்கலாம் என்று தமிழக முதல்வர் நினைக்கிறார். ஆனால் ஒன்று, டான்சி வழக்கில் போடப்பட்ட கையெழுத்தையே தன்னுடையது அல்ல என்று மறுத்தவர், கமலுக்கு எழுதிய கடிதமும் போலி என்று மறுக்க அவ்வளவு நேரம் ஆகும்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
01-பிப்-201320:48:31 IST Report Abuse
Balagiri அடுத்தவர் சொந்த விஷயங்களின் ஆதாரங்களை டைரி, கடிதங்கள் போன்றவற்றை, அரசியல் அல்லது அரசாங்கத்திற்கு தொடர்பில்லாதவைகளை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் வைத்திருப்பதே குற்றம், அதையும் சுய லாபத்திற்கு பத்திரிகைகளில் வெளியிடுவது சைபர் குற்றத்திற்கு இணையானது. இந்த கடிதம் உண்மையென்றால் கூட அது எப்படி இவரிடம் வந்தது அதை ஏன் இவர் வைத்திருந்து இப்போது வெளியிடவேண்டும்? இது ப்ளாக்மெயில் எனப்படும் குற்றத்தில் சேர்க்கப்படும். இந்த விவகாரத்தையே ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரத்தில் இணைத்து கருணா முதல்வராக இருந்தகாலத்தில் சொத்து குவிப்பு வழக்கு என்ற பெயரில் தன வீட்டை சோதனை இட செய்து, அதிகாரிகளின் உதவியுடன் தன சொந்த விஷயங்களை திருடி சென்றது போல் வேண்டும் என்றே தன வீட்டில் ஆடம்பர பொருட்களை குவித்து பொய் வழக்கு போட்டிருகின்றார் என்று வழக்கை ரத்து செய்யலாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
Rate this:
9 members
0 members
28 members
Share this comment
Cancel
Puthiyavan Raj - New Delhi ,இந்தியா
01-பிப்-201320:25:32 IST Report Abuse
Puthiyavan Raj திரு. கனகராஜ், கலைஞரை எந்த வித பிடி ஆணையோ நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் நள்ளிரவில் படுக்கை அறைக்குள் புகுந்து காட்டு மிராண்டி தனமாக கைது செய்த்தை கண்டித்த நீதி அரசர், நீதிமன்றத்தில் அரசின் விசாரணை அதிகாரியை முகத்தில் அறைவது போல நேரடியாக ஒரு சவுக்கடி கேள்வி கேட்டார், “உன் இதயத்தில் சதை இருக்கிறதா களிமண் இருக்கிறதா?”என்று. சிலர் இதயத்தில் மட்டுமல்ல தலையிலும் களிமண் தான் இருக்கிறது போல. அதனால் தான் சட்டவிரோத கைதை sadist போல கிண்டல் செய்து பேசுகிறார்கள்.
Rate this:
8 members
0 members
14 members
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
01-பிப்-201320:17:53 IST Report Abuse
ravi ramanujam r நெஞ்சுக்கு நீதியில் உண்மையை தவிர தன் வடிகட்டின அத்தனை சினிமா வசனங்களை எழுதி எல்லோரையும் நம்ப வைத்த மகான். மூப்பனாரை பிரதமர் நாற்காலிக்கு வர விடாமல் மாறனுடன் இவர் செய்த தகிடுதத்தங்கள் உலகம் அறிந்தவை. தன் சொல் வன்மையால் உடன்பிறப்புகளை ஏமாற்றி வந்து கொண்டு இருக்கிறார். ஒட்டு வேட்டையாட தன் தொண்டர்கள் தேவை. பதவி என்று வரும்போது தன் வாரிசுகள் மட்டுமே இந்த முத்தமிழ் வித்தகருக்கு நினைவிற்கு வருவர். தன் குடும்பத்தில் மத்திய அமைச்சராக அழகிரியை இவர் முன்மொழிந்ததில் இருந்தே தெரியவில்லையா இவரின் சுய ரூபம். டெல்லிக்கு செல்லாமல் எந்த ஒரு அரசு கூட்டத்திலும் பங்கு கொள்ளாமல் பதவியை மட்டுமே அனுபவிக்க தெரிந்த ஒரு மனிதரை பல முறை பிரதமர் கேட்டும் எதற்கும் செவி சாய்க்காமல் இருக்கும் மாமனிதரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றது இந்திய பாராளுமன்றம். என்னே தமிழகர்கள் பெற்ற பிறவி பயன் கலைஞருக்கு மற்றவர்களை குறை சொல்வது அல்வா சாப்பிடுவது போல ஆனால் தன் குடும்பத்தில் உள்ள ஒருவரை தட்டி கேட்கும் உரிமையை என்று பெறுவாரோ நாஞ்சில் மனோகரன் ஒரு காலத்தில் எழுதிய கவிதை தான் நினைவிற்கு வருகிறது
Rate this:
14 members
0 members
10 members
Share this comment
Raju Nellai - coimbatore,இந்தியா
05-பிப்-201309:42:49 IST Report Abuse
Raju Nellai" கருவின் குற்றம் " எனக்கும் நினைவு வருகிறது - மறக்க கூடிய கவிதையா அது. ஆனால் மனோகரனையே உருட்டி மிரட்டி வை கோ வுடன் செல்ல விடமால் கட்சியிலேயே இருக்க வைத்து விட்டாரே... வஞ்சகத்தின் மொத்த உருவம்.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
01-பிப்-201319:53:06 IST Report Abuse
m.viswanathan இனமான தமிழ் இன தலைவருக்கு வேறு வேலையே இல்லை போலும். பேசமால் கட்டுமரமாக மாறிவிட வேண்டியதது தானே
Rate this:
4 members
0 members
6 members
Share this comment
Cancel
Vaithianathan Vadivel - Pondicherry,இந்தியா
01-பிப்-201319:15:20 IST Report Abuse
Vaithianathan Vadivel உன் மேல கேஸ் போட்டாலும் உன்ன யாரும் ஒன்னும் பன்னமுடியாதுன்க்ற தைரியம்.ஏன்னா கைது பண்ண வந்தா சட்டைய கழட்டி போட்டுட்டு ரோட்ல உக்காந்து ஒப்பாரி வப்பியே.
Rate this:
8 members
0 members
17 members
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
01-பிப்-201318:00:12 IST Report Abuse
Devanand Louis 30 வருடதிர்க்குமுன்பே MGR வீட்டில் கடிதத்தை திருடீவிடார் என்று கருணா இப்பொழுதாவது ஒபுக்கொண்டுள்ளார் என்று பெருமைபடவேண்டிய்ச்விசயம் , என்றும் கருணா அவர்கள் தான் செய்ததை ஒபுகொண்டதைல்லை
Rate this:
7 members
0 members
33 members
Share this comment
Raju Nellai - coimbatore,இந்தியா
05-பிப்-201309:56:29 IST Report Abuse
Raju Nellai1989 இல் அம்மா எதிர்கட்சி தலைவராக இருந்த சமயம் - அவரின் ராஜினாமா கடிதத்தை போலீஸ் ஐ வைத்து திருடி அப்போதைய சபாநாயகர் தமிழ் குடிமகனிடம் கொடுத்து-அவரும் அதை ஏற்று கொண்டதாக அறிவித்து- இப்படி பட்ட கேவலமான அரசியலுக்கு சொந்தக்காரர்... கேடுகெட்ட குணங்கள் அவரின் ரத்தத்தில் ஊறியது.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
01-பிப்-201317:29:17 IST Report Abuse
raj tbm நரியை வெளியில் காட்டவேண்டியதுதானே.அந்த கடிதத்தை இப்போது காட்டிவிட்டால் நீங்கள் ரொம்ப நல்லவராகிவிடலாமே. நீதிமன்றத்தில் தான் காட்டுவேன் என்று அடம் பிடிக்காதிர்கள்.
Rate this:
4 members
0 members
14 members
Share this comment
sethu - Chennai,இந்தியா
01-பிப்-201320:12:58 IST Report Abuse
sethuபூனை எப்போ வெளியே வரும்...
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
01-பிப்-201317:28:21 IST Report Abuse
Devanand Louis விசவரூபம் படம் இழப்பிற்கு கருன்ன அவர்கள் 2-G அடித்த கொள்ளை பணதிளுருந்து கொடுக்கவேண்டியதுதானே
Rate this:
5 members
0 members
25 members
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201317:17:18 IST Report Abuse
SK2011 கருணாநிதியின் நூலகத்தில் இது போல எத்தனை கடிதம் இருப்பதாக ஒரு பொய் பித்தலாட்டம் உள்ளதோ..
Rate this:
3 members
0 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்