விஸ்வரூபம்' பட விவகாரம் தொடர்பாக, முத்தரப்புபேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து, உள்துறைச் செயலரிடம், கமல்சார்பில்நேற்று மாலை, கடிதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இன்றுபேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக, கமலின்சகோதரர்சந்திரஹாசன் கூறியதாவது: விஸ்வரூபம் படப் பிரச்னையில், சுமுகமான முடிவு ஏற்படுவதற்கு, நேற்று முன்தினம், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள், கமல்ஹாசனை சந்தித்து பேசினர். படத்தில் அவர்கள் நீக்கச் சொன்ன காட்சிகள், வசனங்களை, நீக்கி விடுவதாக கமல் தெரிவித்தார்.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, இஸ்லாமிய அமைப்புகளுடன்பேசி, சுமுக உடன்பாடு காணுமாறு தெரிவித்துள்ளார். இந்தியில், விஸ்வரூபம் இன்று வெளியாக உள்ளதால், கமல் மும்பை சென்றுள்ளார். இதனால், எங்கள் தரப்பில், இஸ்லாமிய சங்கங்களுடன், நானும், இயக்குனர் அமீரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இப்பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு காணப்படும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா கூறுகையில், ""பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, 24 முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, விஸ்வரூபம் படத் தயாரிப்பாளர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்று, முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார். இந்நிலையில், முத்தரப்புபேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக கமல் தரப்பில்,நேற்று மாலை, உள்துறைச் செயலரிடம் கடிதம் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அழைக்கும்பட்சத்தில், முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று துவங்க வாய்ப்பு உள்ளது.
காயம் ஆறவில்லை: கமல்: விஸ்வரூபம் வெளியீட்டிற்காக,நேற்று மும்பை புறப்பட்ட கமல், சென்னை விமான நிலையத்தில் அளித்தபேட்டி: என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. வேதனையோடு தான் செல்கிறேன். தமிழக அரசு மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. பேச்சுவார்த்தை மூலம், பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.விஸ்வரூபம் வழக்கில், உச்ச நீதிமன்றத்தை அணுகும் எண்ணம் இல்லை. எனக்கு இங்கு சரியான தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், வேறு வழியில்லை. இவ்வாறு கமல் தெரிவித்தார்.
மும்பையில் கமல் பேட்டி: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த, நடிகர் கமல் ஹாசன் கூறியதாவது:முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு நான், நன்றி கடன் பட்டுள்ளேன். எனக்கு உதவி செய்ய அவர் கனிவுடன் முன்வந்துள்ளார். இப்போது அவர், எங்களுக்கு உதவி செய்துள்ளார். ஆகவே, நாங்கள் சுப்ரீம் கோர்ட் செல்ல போவதில்லை; அதற்கான தேவையில்லை.இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.
ரசிகர்களுக்கு கமல் உத்தரவு: "விஸ்வரூபம்' படப் பிரச்னையில், " நடந்தது என்ன' என்பது, குறித்து, கமல் ரசிகர்கள் தொகுத்து வெளியிட, விரும்பிய துண்டு பிரசுரங்களுக்கு, கமல் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமைதி காப்பது முக்கியம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து,நேற்று முன்தினம் கமல் அளித்த பேட்டி அவரது ரசிகர்களை ஆவேசத்திற்குள்ளாகியுள்ளது. கமலுக்கு ஆதரவாக, நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவரது வீட்டில் குவிந்தனர்.அப்போது, பட வெளியீட்டிற்கு ஏற்பட்ட தடைகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும், விளக்கமான துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர். இவர்களில் சிலர், நேற்று காலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்திற்கு வந்து, கமலை சந்தித்து அனுமதி கேட்டனர். அப்போது, கமல் மும்பை புறப்பட்டு சென்று விட்டதால், அவரது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின் ஒத்துழைப்புடன், படத்தை திரையிடும் முயற்சி துவங்கி விட்டது. இந்நிலையில், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டால், பிரச்னைவேறு வகையில் திரும்பும். எனவே ரசிகர்கள் எவ்வித செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என கமல் உத்தரவிட்டுள்ளதாக, அவரது அலுவலகத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கலைந்துள்ளனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முஸ்லீம் தரப்பினர் preview show முடிந்ததுமே கூட தங்கள் உணர்வுகளை கமல் தரப்பினரோடு பகிர்ந்து கொண்டு, திருத்தங்களை முன் மொழிந்து சரி செய்துகொண்டிருக்கலாம். இரு தரப்பு பேச்சு வார்த்தையில் பிரச்னை தீர்க்க முடியாதோ முத்தரப்பு பேச்சு வார்த்தை என்பது சற்று விஷமத்தனமாகவே தோன்றுகிறது. அரசு எந்திரங்களுக்கு இதை விட்டால் வேறு வேலை இல்லையோ?
தற்போதும் முஸ்லீம் தரப்பினரும், கமல் தரப்பினரும் ஒருமித்து படத்தில் வேண்டிய திருத்தங்கள் செய்து தங்களுக்குள் சமரசமாகிவிட்டதை ( ஏற்கெனவே படத்தடைக்கு ஒரு மனு கொடுத்தது போல் ) புதியதாக ஒரு மனுவை தலைமை செயலரிடம் அளித்து பிரச்சினை சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று முஸ்லீம் தரப்பினர் பறை சாற்றி இருக்கலாம். ஆனால் முத்தரப்பு பேச்சு வார்த்தை ( முதல்வர் விளக்கத்தில் சொல்லாதது ) என்று முஸ்லீம் MLA பேசியது, வேண்டுமென்றே கமல் தரப்பை அரசிடம் அழைப்பது ஒரு நாடகமாகவே தோன்றுகிறது. முதல்வராவது இரு தரப்பு பேச்சு வார்த்தையே போதுமானது என்று ஒரு அறிவிப்பு செய்திருந்தால் அது முதல்வரை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக காட்டியிருக்கும். அனைத்துத்தரப்பினருக்கும் கௌரவமாக இருந்திருக்கும்.
மத கலவரங்களோ வன்முறையோ மக்களால் செய்யபடுவது இல்லை அது அரசியல் வாதிகளும் தீவிரவாதிகளும் கைகோர்த்து செய்யும் வேலை. பாதிக்கபடுவது மட்டுமே மக்கள். மாட்டை தண்ணிக்குள் முழுக விட்டு கொம்பை காட்டி விலை பேசுவதுபோல் வெளியிடாத யாரும் பார்க்காத படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து இருப்பதாக பொய் பிரசாரம் செய்து தடுக்க நினைப்பது அராஜகம் கலாச்சார தீவிரவாதம் அன்றி வேறொன்றும் இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.