As Secretariat to the hospital | தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது செல்லும்: சுப்ரீம் கோர்ட்| Dinamalar

தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது செல்லும்: சுப்ரீம் கோர்ட்

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (42)
Advertisement
தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது செல்லும்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட, மேல் முறையீட்டு மனுக்களை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டசபைக்கான கட்டடம் கட்டப்பட்டது. 425 கோடி ரூபாய்க்கும் மேல், இதற்காக செலவிடப்பட்டது. 2010ம் ஆண்டு, மார்ச்சில், புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டடத்தை, பிரதமர், மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.புதிய கட்டடத்தில், சட்டசபையும் கூடியது. தலைமை செயலகத்தின் சில துறைகள், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில், 2011ம் ஆண்டு, மே மாதம், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே, தலைமைச் செயலகமும், சட்டசபையும் மீண்டும் மாற்றப்பட்டன.இதையடுத்து, புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது என, தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் வீரமணி, மியாஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த ஐகோர்ட், "பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது என, கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது. அதை, தமிழக சட்டசபையும் அங்கீகரித்துள்ளது. இதில், கோர்ட் தலையிட முடியாது' என்று கூறி, தள்ளுபடி செய்தது.
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர் வீரமணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, நேற்று, தலைமை நீதிபதி, அல்டமஸ் கபீர் தலைமையிலான, "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது."பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "சட்டசபை மற்றும் தலைமை செயலகத்தை, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது சரியானதே. இந்த விஷயத்தில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.சுப்ரீம் கோர்ட்டில், இந்த உத்தரவு வருவதற்கு முன், நேற்று முன் தினம் புதிய தலைமை செயல கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
varadh - chennai,இந்தியா
01-பிப்-201320:58:06 IST Report Abuse
varadh Karunanidhi doesnot have his own brain.His brain is a borrowed and borrowing brain only.Construction of a new secretariate was the brain child of Ms.Jayalalitha.Karunanidhi and his gang which participated in the central including the 2G fame Rja gave trouble and grabbed like land grabbing and gave the opportunity to Karunanidhi.Karunanidhi constructed this inverted pot through his fris of Dubai's ETA.Jayalalitha has done a good job by converting the costly Secretariate into a multispeciality hospital.People's money has gone into the pockets of people themselves.Jayalalitha should institute an enquiry into all aspects of construction so that irregularities committed can be unplugged and bring back to treasury money that might have been looted.
Rate this:
Share this comment
Cancel
Marian - Coimbatore,இந்தியா
01-பிப்-201319:25:42 IST Report Abuse
Marian நற்குனத்தோடு அம்மா எடுத்த முடிவு இது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படும் என்று நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு எப்பவோ தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
01-பிப்-201318:38:48 IST Report Abuse
R.BALAMURUGESAN ...அப்பாடி ஒரு ஆஸ்பத்திரி ரெடியாகி விட்டது... நோயாளிகள் தான் இருக்கவே இருக்கிறார்கள் தமிழக ஏமாளி மக்கள்... என்னே ஒரு மிகப் பெரிய சாதனை...
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201317:08:28 IST Report Abuse
SK2011 அரசின் பணத்தையும் மக்களின் பணத்தையும் தன் குடும்பத்தோடு வீணடித்து சூறையாடி பிறகு கை வைக்கும் அனைத்து இடதில்லும் தில்லு முள்ளு செய்த இந்த கருணாநிதிக்கு இதைபோல வரும் தீர்ப்பு ஒரு அசிங்கம் அவமானம். 1500 கோடி ருபாய் யாருடைய பணம். மக்களுக்கு உதவியாக இருக்கும் ஆசபதிரியியாக மாற்றிய ஒரு நல்ல எண்ணம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா விற்கு தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிரார்கள். கருணாநிதி கையில் இருந்து அத்தனை கோடிகளையும் காப்பாற்றி மக்கள் கையில் சேர்க்கும் ஜெயலலிதா அம்மையாருக்கு கடவுளின் அருள் என்றும் உண்டு..பல்லாண்டு காலம் வாழ அந்த இறைவன் ஜெயலலிதா விற்கு அனைத்தும் செய்து அவர் நலம் காக்க வேண்டும். பிறகு மக்கள் என்றும் காக்கபடுவர்.
Rate this:
Share this comment
Cancel
Knpalayam Rathinam - Coimbatore,இந்தியா
01-பிப்-201316:30:41 IST Report Abuse
Knpalayam Rathinam இது ஒரு நல்ல அருமையான முடிவு என்பதை நாம் ஒப்பு கொள்ள தான் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
01-பிப்-201315:57:49 IST Report Abuse
maravan சுப்ரீம் கோர்ட் , காவேரி தண்ணீர் திறக்க ஆணை இட முடியாது..ஆனால் இது போன்ற வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்க முடியும்....யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லை....மறவன்
Rate this:
Share this comment
Cancel
MATHIAS - CHENNAI,இந்தியா
01-பிப்-201313:32:00 IST Report Abuse
MATHIAS இதே போல் தனியார் குடியிருப்பு பகுதியாக அனுமதி வாங்கி கட்டிய பின், வேறு நோக்கத்திற்காக மாற்றினால், இந்த அரசு ஒப்[புக்கொள்ளுமா?
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
01-பிப்-201313:28:15 IST Report Abuse
சத்தி அம்மாவின் கருணையோ கருணை. பிற்காலத்தில் திமுக கட்டிய கட்டிடத்தை வீம்புக்கு மருதுவமனையாக்கிய வரலாறு முக்கியமல்ல, சுப்ரீம் கோர்ட்டும் தலையிட முடியாது எனபது இனி எடுக்கபோகும் முடிவுக்கும் பக்கபலமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
01-பிப்-201313:26:13 IST Report Abuse
Snake Babu அரசியல விடுங்க, ஒரு மருத்துவமனை கிடைச்சிருக்கு, பராமரிப்பை பற்றி யாரவது கவலை படுவார்களா? தண்ணி தொட்டி யோ இல்ல குப்ப தொட்டியோ பல கொடிகளை விழுங்கி இருக்கு. இதை சரிவர பராமரிப்பார்களா? நுலகம் நூலகமா இல்லா. மருத்துவமனை நிறைய அசுத்தம் கூடும் இடம், இதன் பராமரிப்பு ரொம்ப முக்கியம். ஆகையால் மருத்துவமனையை தங்கள் வெற்றியாக கொண்டடிகொண்டே நன்றாக பார்த்துக்கொண்டால் நல்லா இருக்கும்
Rate this:
Share this comment
சத்தி - Bangalore,இந்தியா
01-பிப்-201314:56:06 IST Report Abuse
சத்திஅக்கறையான நல்ல கருத்து வாழ்த்துக்கள். மருத்துவமனிக்கு தடையேதும் இனி இல்லை எனவே இனி அந்த கட்டிடத்தை பற்றி அவர் கவலைப்பட போவதில்லை என்பதே உண்மை....
Rate this:
Share this comment
Cancel
Arasan - chennai,இந்தியா
01-பிப்-201312:00:35 IST Report Abuse
Arasan ஒரு நோக்கத்திற்காக கட்டிய கட்டிடத்தை, அரசியலுக்காக வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துவது நல்லா இருக்காது, நிலைக்கவும் நிலைக்காது. வம்புக்கும் ஓர் ல்லை உண்டு. வரம்பு மீறிய செயல் அதிகார துஷ்பிரயோகம்.
Rate this:
Share this comment
Lalitha - Chennai,இந்தியா
01-பிப்-201317:11:06 IST Report Abuse
Lalithaஅம்மா அடுத்தமுறை ஆட்சிக்கு வரமாட்டார் என்று அவருக்கே தெரியும். வேறு என்ன சொல்ல?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை