Advertisement
தெலுங்கானா அமையவில்லை : சோனியா மீது போலீசில் புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,23:21 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 31,2013,23:25 IST

கரீம்நகர்: "தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என கூறிய காங்கிரஸ் தலைவர், சோனியா உறுதிமொழியை காப்பாற்ற தவறிவிட்டார்' என தெரிவித்து, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்தவர், புகார் செய்துள்ளார்.
அந்த கட்சியை சேர்ந்த, சர்தார் ரவீந்தர் சிங் என்பவர், ஆந்திர மாநிலம், கரீம்நகர் போலீஸ் ஸ்டேஷனில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:ஐ.மு., கூட்டணியின் தலைவரான சோனியா, கடந்த, 2004, 2009ம் ஆண்டு பொது தேர்தல் பிரசாரத்தின்போது, தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என, உறுதியளித்தார். ஆனால், பத்தாண்டுகள் ஆகியும், உறுதி மொழியை காப்பாற்றவில்லை.கரீம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் இந்த உறுதிமொழியை அளித்தார். ஆனால், தனி மாநிலம் அமைக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்காக, 800க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் உறுதியளிக்கப்பட்டு இருந்தது; சோனியா நடவடிக்கை எடுக்காததால் தான், இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இது தொடர்பாக, போலீசார் புகாரை பதிவு செய்து, சோனியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து, கரீம்நகர் போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் கூறுகையில், ""புகாரை பதிவு செய்வது குறித்து, அரசு வக்கீலின் கருத்துக்கு அனுப்பியுள்ளோம். அவரிடம் இருந்து பதில் கிடைத்த பின்,
நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
villupuram jeevithan - villupuram,இந்தியா
01-பிப்-201307:39:08 IST Report Abuse
villupuram jeevithan சீக்கிரமாக முடியுங்கப்பா, அதை உதாரணம் காட்டி இங்கேயும் அண்ணன் தம்பி பாகப் பிரிவினைக்கு ரெடியாக இருக்கிறாங்க?
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
01-பிப்-201307:08:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே முதல்ல ஜகன் மோகன் ரெட்டி என்ன சொல்றாருன்னு பாருங்க கேசு போட்டவரே, அப்புறம் சோனியாவ இழுக்கலாம்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
01-பிப்-201306:23:22 IST Report Abuse
JALRA JAYRAMAN இப்படியே தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற படவில்லை என்று கோர்ட்டுக்கு போனால் விடிந்த மாதிரித்தான். தேர்தலில் வெற்றி பெற எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி விசுவது இயற்கை தான்.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
01-பிப்-201305:21:48 IST Report Abuse
naagai jagathratchagan எந்த அரசியல் வாதி வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் ....ஊழல் செய்யாமல் வாழ்ந்துள்ளார் ...சாக்கடை என்றால் நாறத்தான் செய்யும் ...இதில் புதுமையென்ன இருக்கு ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
01-பிப்-201304:18:31 IST Report Abuse
N.Purush Bharatwaj பித்தலாட்டம் பண்ணுவது ,ஏமாற்றம் செய்வது,இரு பிரிவினரை தூண்டி விட்டு குளிர் காய்வது ,கமிஷன் அமைப்பது இதெல்லாம்காங்கிரஸ் தலைமை முதல் அடிமட்டதில் உள்ளவர் வரை அனைவருக்கும் அத்துபடி....அது குறைந்த பட்ச தகுதியும் கூட.....
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Thangairaja - Dammam,சவுதி அரேபியா
01-பிப்-201300:33:44 IST Report Abuse
Thangairaja இதெற்கெல்லாம் என் கோர்ட்டுக்கு போகிறீர்கள். பொதுத்தேர்தல் தான் வரப்போகிறதே.......மாத்தி யோசிக்க வேண்டியது தானே......இப்போது ஆதரவு தெரிவிக்கும் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் தெலுங்கானா அமைக்க பட போவதில்லை.
Rate this:
7 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.