தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், தனியாரிடம் டீசல் நிரப்புவதில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில், டோக்கன் சிஸ்டத்தை அமல்படுத்த, போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கென அரசுக்கு, போக்குவரத்து கழக கோட்ட நிர்வாக இயக்குனர்கள், அறிக்கை அனுப்பி உள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம், 21 ஆயிரத்து, 982 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்கு தேவையான டீசல், இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து, மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, டெப்போக்களில் நிரப்பப்பட்டு வந்தது.எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசலுக்கான விலை, லிட்டருக்கு, 11.81 ரூபாய் வரை உயர்த்தியதை அடுத்து, ஜன., 25ம் தேதி முதல், அரசு போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு, தனியார் பெட்ரோல், "பங்க்' களில் டீசல் நிரப்பபட்டு வருகிறது.இவ்வாறு நிரப்பப்படும் டீசலுக்கு, கண்டக்டர்கள், பயணிகளிடம் வசூலித்த டிக்கெட் கட்டண தொகையில் இருந்து செலுத்தவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பில் பணியாளர்கள்இந்நிலையில், டிரைவர்கள்,
கண்டக்டர்கள், டீசல் நிரப்புவதில் முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், "பங்க்'களில், மூன்று முதல் நான்கு நேர கண்காணிப்பாளர்கள், கிளை துணை மேலாளர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக, பஸ் ஸ்டாண்டுகளில், பஸ்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கி, பயணிகளை ஏற்றும் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அலுவலகங்களிலும், பல்வேறு நிர்வாக பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன.
மேலும், போதிய அளவு டீசல் நிரப்பத் தேவையான பணம், வசூலாகாத பட்சத்தில், டீசல் நிரப்ப முடியாத நிலைக்கு, பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தள்ளப்படுகின்றனர். இதனால், பஸ்கள் பாதியிலேயே நிற்கும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.தனியாரிடம் டீசல் நிரப்புவதால் ஏற்படும், சாதக, பாதகங்கள் குறித்து, எட்டு கோட்ட நிர்வாக இயக்குனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், குறிப்பிட்ட பெட்ரோல், "பங்க்'கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுடன் அந்தந்த கிளை மேலாளர்கள், ஒப்பந்தம் செய்து கொள்ளும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி பஸ்கள், டெப்போக்களில் இருந்து புறப்படும் போது, கிளை மேலாளர் கையொப்பம் இடப்பட்ட டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கனைக் காண்பித்து, குறிப்பிட்ட பெட்ரோல், "பங்க்'களில், டீசல் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
தினந்தோறும், பெட்ரோல், "பங்க்'களில் சேகரிக்கப்படும் இந்த டோக்கன்களை, "பங்க்' உரிமையாளர்கள், அந்தந்த கிளைகளில், காசாளரிடம் வழங்கி, பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.அது மட்டுமின்றி, சில கிளைகளில், காசாளர்கள், "பங்க்'குக்கே வந்து, டோக்கன்களை திரும்ப பெற்று, அதற்கான பணத்தை செலுத்தி விடுவர். சில, "பங்க்'களிடம், வங்கி கணக்கு எண்களும் பெறப்பட்டுள்ளன. டோக்கன்களை, "பங்க்' ஊழியர், கிளை காசாளரிடம் வழங்கும் பட்சத்தில், அதற்கான தொகையை, "பங்க்'கின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டமும், தயார் நிலையில் உள்ளது."விரைவில் அமல்'கோட்ட நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:தனியார் பங்குகளில், பஸ்களுக்கு டீசல் நிரப்புவதால், பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதுடன், தேவை இல்லாமல் பிற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களை, டீசல் நிரப்பப்படுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டி உள்ளது. அது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.இந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விரைவில் டோக்கன் சிஸ்டத்தை அமல் படுத்த உள்ளோம். இந்த டோக்கன்களை, டிரைவர், கண்டக்டர்கள், டெப்போக்களிலும், பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள நேர கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் பெற்று, குறிப்பிடப்பட்டுள்ள பெட்ரோல், "பங்க்'களில், டீசல் நிரப்பிக் கொள்ளலாம்.அந்த பங்கில், தற்போது கிளைகளில் பஸ்களில் டீசல் நிரப்பும் பணியில் ஈடுபடும் ஊழியர், தனியார், "பங்க்'கிலும், டீசல் நிரப்பும் பணியை கண்காணிப்பார். இதன் மூலம் எவ்வித முறைகேடுகளுக்கும் முடிவு கட்டப்படும்.
அதற்கான தொகையை கிளை காசாளர், மொத்தமாக பெட்ரோல், "பங்க்' ஊழியர்களிடமோ, வங்கியிலோ செலுத்தி விடுவர். இந்த திட்டத்துக்கான அறிக்கையை அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்தவுடன், அமல்படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டோக்கன பங்குல கொடுத்து ......... கம்மியா டீசல் புடிச்சதுல அடிச்ச கமிஷன வாங்கி .......... டாஸ்மாக்ல சரக்கடிக்கிரத விட ............. பேசாம டோக்கன கொண்டு போய் டாஸ்மாக்ல கொடுத்து ................. சரக்கும் மிச்ச சில்லரையும் வாங்கிக்கிற வசதி செஞ்சி கொடுத்தா ........... எத்தனையோ டிரைவர் கண்டக்டருங்க இன்னும் சந்தோஷப்படுவாங்க இல்ல ........ இதெல்லாம் யாருக்கு புரியுது ???
மேலதிகாரிகள் என்னவோ அப்படியே யோக்கியனுங்க போலவும் கீழ் மட்ட ஊழியர்கள்தான் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் போலவும் நல்லா படம் காட்டுரானுங்கப்பா. இன்னைக்கு போக்குவரத்துத் துறை இந்த இழி நிலைமைக்கு வந்ததே மேலே உள்ள அதிகாரிகளால்தானே? கீழே உள்ளவனா கோடி கோடியாய் அடிக்க முடியும்? ஆக, திருடனுக்குத் தான் அடுத்த திருடனை நன்றாக தெரியும் என்பது இதனால் விளங்குகிறது. கொள்ளையடிக்கும் அதிகாரிகளை காப்பாற்றுவதுதான் இரண்டு கழகங்களுக்கும் ஒரே வேலை. அப்போதானே நாம மாட்டாம இருக்கலாம்
இந்த தலை எழுத்திற்கு பெட்ரோல் பாங்க்கிற்கு வரும் அந்த லாரிகளை நேரடியாக போக்குவரத்து நிர்வாகம் விலை கொடுத்து வாங்கி தங்கள் இடத்திலேயே வழங்கலாமே? பொது மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த டீசல் விலையை இதே விலைக்கு தர ஒரு அரசாங்கத்தால் முடியவில்லை என்றால் என்னை நிறுவனங்கள் அவ்வளவு சக்தி படைத்தவர்களா? ஒரு அரசாங்கமே எண்ணெய் நிறுவனங்களை அசைக்க முடியவில்லை என்றால் எதிர்காலங்களில் பொது மக்கள் என்னவெல்லாம் இன்னல்களுக்கு ஆளாகப் போகிறார்களோ? இதுவும் ஒருநாள் விஸ்வரூபம் எடுக்குமோ? வந்தே மாதரம்
அடேய் புத்திசாலிகளா நம்ம கண்டக்டர்கள் எந்தனுக்கு எத்தனுங்க நீங்க கொடுக்கும் டோக்கனுக்கு நூரு லிட்டர் போடமுடியும் என்றால் தொன்னுறு லிட்டர்போட்டுவிட்டு பத்துலிட்டர் காசை சிண்டிகேட் அமைத்து கொள்ளை அடிப்பானுங்க.இதை டோக்கன் கொடுக்கும் காசாலரே என்னுடைய பங்கு மொத்த மதிப்பில் ஐந்து சதம் வசூலித்து ஏப்பம் விடுவாங்க என்னுமோ நம்ம ஆளுக குறுக்கு புத்தி தெரியாத மாதிரி சொல்லுரிங்க கத ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.