புதுடில்லி: "சீனாவின், திபெத் பகுதியில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அணைகள் கட்டப்படுவதால், இந்தியாவில் பிரம்மபுத்ரா நதியை நம்பியுள்ள, மாநிலங்களின் நலன் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நேற்று கூறியதாவது:பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும், மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது தொடர்பாக, இந்தியாவின் சார்பில் கருத்துகளையும், ஆலோசனைகளையும், சீனாவுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். குறிப்பாக, அணையின் நீர்மட்டம் எவ்வளவு இருக்க வேண்டும் எனவும், குறிப்பிட்டுள்ளோம். இந்த நடவடிக்கையின் மூலம், பிரம்மபுத்ரா நதியால் பயன் அடைந்து வரும், மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.