மழை வருமா, வராதா? நத்தைகள் சொல்லிவிடும்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


லண்டன்: "வானிலை நிலவரத்தை முன்கூட்டியே தெரிவிப்பதில், நத்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன' என, லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.லண்டனின், யார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஆன்ட்ரி கர்லோ இது குறித்து கூறியதாவது:ஒரு தாவரத்தையோ அல்லது கம்பத்தையோ நோக்கி நத்தை நகருகிறது என்றால், நிச்சயமாக மழை வரப்போகிறது என்று அர்த்தம்.வானிலை யில் ஏற்படும் மாறுபாடுகளை தெரிவிப்பதில் நத்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்தியதரை கடல் நாடுகளின் பகுதிகளில் உள்ள குகைகளில் கண்டறியப்பட்ட நத்தைகளின் ஓடுகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டதில், அவை பல்வேறு காலகட்டத்தில், ஈரப்பதத்துடன் இருந்தது தெரியவந்தது.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில், விவசாயிகள் முதன் முறையாக கால்பதித்தபோது, அங்கு, இப்போ து உள்ளது போல்,அவ்வளவு வெப்பம் மிகுந்த பகுதிகளாக இல்லை. மாறாக, மிகவும் இதமான சூழல்தான் நிலவிவந்தது. மத்தியதரை கடல் நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில், நத்தைகளின் ஓடுகளை காண முடிந்தது. நிலத்தில் வாழும் நத்தைகள், மனிதர்களின் குணாதிசயங்களை தெரிவிப்பவையாகவும் உள்ளன. ஸ்பெயின் மற்றும் இத்தாலியில், நத்தைகளை பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு செய்ததில், அவை வெவ்வேறு விதமான வானிலை நிலவரத்தை தெரிவிப்பவையாக இருந்தன. இந்த சோதனையின் மூலம், ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் வானிலை மாறுபாடுகளையும் நத்தைகளால் தெரிவிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தோம்.இவ்வாறு ஆன்ட்ரி கர்லோ கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
02-பிப்-201313:03:52 IST Report Abuse
PRAKASH SUPER
Rate this:
Share this comment
Cancel
durairaj - chennai,இந்தியா
02-பிப்-201309:41:05 IST Report Abuse
durairaj அது சரிங்க....விஸ்வரூபம் படம் வருமா வராதான்ன இந்த நத்தையால சொல்ல முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
01-பிப்-201312:17:25 IST Report Abuse
chinnamanibalan எறும்புகளும் மழை வருவதை முன்கூட்டியே உணர்ந்து, தங்களால் சேமிக்கப்பட்ட உணவை எடுத்து கொண்டு கூட்டம் கூட்டமாக இடம் பெயறும் தன்மை உடையன.ஆறறிவு படைத்த மனிதன் வன்மமும் ,பழிவாங்கும் உணர்வும் உள்ளவனாக வாழும் நிலையில், சாதாரண அறிவு படைத்த இந்த ஜீவராசிகளிடம் இயற்கை அளித்துள்ள அற்புதம் வியப்பை அளிக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்