சென்னை : "செயற்கைக் கோள் மூலம், விமானங்களை கட்டுப்படுத்தும், "ககன்' எனும் புதிய திட்டம், இந்த ஆண்டு, ஜூலை மாதம் துவக்கப்படுகிறது' என, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், வெளிநாட்டு, உள்நாட்டு முனையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, 2015 கோடி ரூபாயில், புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், விமான நிலைய, ஓடுதளமும் விரிவுபடுத்தப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நேற்று திறந்து வைத்து பேசியதாவது: சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே உள்ள உள்நாட்டு முனையத்தில், ஆண்டுக்கு, 60 லட்சம் பயணிகள், வெளிநாட்டு முனையத்தில் ஆண்டுக்கு, 30 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது புதிய முனையங்கள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக உள்நாட்டு முனையத்தில், ஒரு கோடி பயணிகளையும், வெளிநாட்டு முனையத்தில், 40 லட்சம் பயணிகளையும் கையாளலாம். இந்த கட்டமைப்பு வசதிகள் மூலம், வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். மெட்ரோ நகரங்களை தவிர்த்து, மற்ற நகரங்களில் உள்ள, 35 விமான நிலையங்களை, விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் பணிகளை, விமான நிலையஆணையம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் பேசியதாவது: சென்னை விமான நிலையத்தின், இரண்டாவது ஓடுபாதை, 1,032 மீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம், மணிக்கு, 40 விமானங்கள் பறப்பதற்கான வசதி ஏற்பட்டுள்ளது. செயற்கைக் கோள் மூலம், விமானங்களை கட்டுப்படுத்தும், "ககன்' எனும் புதிய திட்டம், இந்த ஆண்டு, ஜூலை மாதத்தில் துவக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
விமான போக்குவரத்துத் துறை செயலர் ஸ்ரீவத்சவா பேசுகையில், "" ஸ்ரீ பெரும்புதூரில் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கான, திட்ட அறிக்கையை, தமிழக அரசு, விமான போக்குவரத்துத்துறைக்கு வழங்கினால், அனுமதியளிப்பதுடன், பணிகளும் விரைவாக துவக்கப்படும்,'' என்றார்.
கவர்னர் ரோசையா, விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வேணுகோபால், விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால் உள்ளிட்டோர், பங்கேற்றனர்.
எம்.ஜி.ஆர்., பெயர் வைக்காததால் புறக்கணிப்பு - முதல்வர் விளக்கம் : விரிவாக்கப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: புதிதாக திறக்கப்படும், நவீன உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு, எம்.ஜி.ஆர்., பெயர் வைக்க வேண்டும் என தெரிவித்து, திறக்கும் முன் இதற்கான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், கடிதம் வாயிலாக, அஜித் சிங்கை கேட்டுக் கொண்டேன்.
இதுகுறித்து, எவ்விதமான அறிவிப்பும் வராத நிலையில், இந்த விமான நிலையத்தை திறந்து வைக்க, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி சென்னை வந்தார். அவரை வரவேற்பது, முதல்வரின் மரபு என்பதால், விமான நிலையம் சென்று நான் வரவேற்றேன். எம்.ஜி.ஆர்., பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு, சாதகமான பதில் வராதது, எனக்கும், மக்களுக்கும் வேதனையை அளித்ததால், துவக்க விழாவில் நான் பங்கேற்கவில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் காமராஜ், அண்ணா பெயர்களில் சென்னை விமான நிலையங்கள் இருக்கும் பொது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரில் இந்த புதிய விமான நிலையம் நடைப்பெறக்கூடாது. மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் மாநில அரசு இருந்தால் தான் அவர்களின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று கூறி தமிழக மக்களை ஏமாற்றியவர்கள் இப்பொழுது இதற்கு என்ன பதில் கூறுகிறார்கள் என்பதை மக்கள் விழிப்புடன் கவனிக்கிறார்கள். இதற்கு காலம் தான் சொல்லும் என்பது எனது கருத்து.
அம்மாவுக்கு உடனடி தேவை நல்ல ஆலோசனை மற்றும் வழிகாட்டும் குழு மட்டுமே. அவருடைய மிக பெரிய பின்னடைவு யாரையும் அருகில் சேர்க்காமல் தனித்தே இருப்பது மற்றும் கூழை கும்பிடு போடும் அமைச்சர்களின் ஆலோசனைகளை கண்மூடித்தனமாக செயல் படுத்துவது.. வெகு ஜன மக்களை விட்டு தூர சென்று விட்டார். விமான நிலையத்திற்கு MGR பெயர் வைத்தால் தமிழகம் சுபிக்ஷமாகி விடுமா.?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.