தூத்துக்குடி: கவுன்சிலர்களின் கூச்சல், குழப்பத்தால், தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம், எவ்வித விவாதமுமின்றி, மூன்றே நிமிடத்தில் முடிந்தது. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம், நேற்று, மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் நடந்தது. கமிஷனர் மதுமதி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். டிசம்பர் மாதம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை, புது பஸ்ஸ்டாண்ட் மைதானத்தில் நடத்த, மாநகராட்சி திடீரென தடைவிதித்து, அதற்கான பந்தலையும் பிரித்தது. அதைக்கண்டித்து, கொறடா கோட்டுராஜா தலைமையில், தி.மு.க., கவுன்சிலர்கள், கறுப்புச்சட்டை அணிந்துவந்தனர். கூட்டம், துவங்கியவுடனே, அதுகுறித்து அவர்கள் பேசியபோது, அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூச்சல், குழப்பத்தால், மக்கள் பிரச்னை மற்றும் தீர்மானங்கள் குறித்து, எவ்வித விவாதமுமின்றி, மூன்றே நிமிடத்தில் கூட்டம் முடிந்தது. பின்னர், தி.மு.க., கவுன்சிலர்கள், நிர்வாகத்தைக்கண்டித்து, கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.